தவிப்பு ஆன்லைனில் கட்டட அனுமதி பெற முடியாமல்ஊராட்சிகளில் தொழில் நுட்ப பிரச்னையால் சிரமம்
தேனி : தமிழகத்தில் மே 21 முதல் ஊராட்சிகளில் குழாய்வரி, சொத்துவரி உள்ளிட்ட வரிகள், கட்டட அனுமதி ஆன்லைனில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. குழாய்வரி, சொத்துவரி ஆன்லைனில் செலுத்தினாலும் கட்டட அனுமதி பெற முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி, குழாய்வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் ஆன் லைன் மூலமாக செலுத்தும் நடைமுறை அமலில் உள்ளது. ஊராட்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட வரியை விட அதிகமாக பணம் வசூலித்து குறைந்த தொகைக்கு ரசீது வழங்குவதாகவும், பல குளறுபடி உள்ளதாக புகார்கள் வந்தன. இதனால் ஊராட்சிகளிலும் ஆன்லைன் மூலம் வரிவசூலிக்கும் முறையை அரசு மே 21 முதல் அறிமுகபடுத்தியது. அப்போது ஆன்லைனில் கட்டுமான அனுமதி பெற 10ஆயிரம் சதுரடிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கான அனுமதியை இணைய வழியில் மட்டுமே தரவேண்டும். விண்ணப்ப பரிசீலனை, கள ஆய்வு நடைமுறைகள் அனைத்தும் இணைய வழியில் தான் நடக்க வேண்டும். எந்த கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. இதற்கான பயிற்சி கையேடுகளில் உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது ஊராட்சிகளில் சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம் உள்ளிட்டவை மட்டுமே ஆன்லைன் மூலம் செலுத்த முடிகிறது. கட்டட அனுமதி மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவே முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சில ஊராட்சிகளில் தவறான வழிகாட்டுதல்களை கூறி அதிக தொகை கேட்பதால் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து ஊரக வளர்ச்சி அதிகாரிகள் கூறுகையில், 'அரசு ஆன்லைனில் வரி செலுத்த கூறி உள்ளது. தற்போது கட்டட அனுமதி வழங்குவதற்கான 'சாப்டூவேர்' ரால் தொழில் நுட்ப பிரச்னை உள்ளது. இதனால் விண்ணப்பிக்க முடியவில்லை. தற்போது அதற்கு தீர்வுகாணும் பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சிகளில் கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்தால் வாங்கிய தொகைக்கு கணினி ரசீது வழங்க கூறி உள்ளோம். கையில் ரசீது எழுதி கொடுத்தால் ஊராட்சி நிர்வாகம் மீது புகார் அளிக்கலாம்' என்றனர்.
நான் தொழிற்சாலைக்கா விண்ணப்பித்தேன். 20நபர் வேலை வாய்ப்புகள். ஆனால் 250சைக்கிள் 250 மோட்டார் சைக்கிள் 40கார் நிறுத்த இடம் ஒதுக்கினால் மட்டுமே பதிவு செய்யமுடியும்.