Load Image
Advertisement

பால்காரருக்கெல்லாம் ஒரு தினமா? அமெரிக்காவில் வினோதம்..!

A day for all milkmen? Strange in America..!   பால்காரருக்கெல்லாம் ஒரு தினமா? அமெரிக்காவில் வினோதம்..!
ADVERTISEMENT
அமெரிக்காவில் பல வித்யாசமான தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் ஆக.,12 ஆம் தேதி வீடுகளுக்குச் சென்று பால் சப்ளை செய்யும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்யும் 'மில்க்மேன் டே' கொண்டாடப்படுகிறது.

18 ஆம் நூற்றாண்டு துவங்கியே பால்காரர்கள் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வீடுகள், கடைகள், ரயில் நிலையம், வங்கி உள்ளிட்ட பொது இடங்கள் ஆகியவற்றுக்கு பால் சப்ளை செய்யத் துவங்கிவிட்டனர். அதிகாலை எழும் வழக்கம்கொண்ட பால்காரர்களே நம்மூரில் காலை இல்லத்தரசிகளை எழுப்பிவருவது அனைவரும் அறிந்ததே. இதுபோல பால் மற்றும் பால் பொருட்களாகிய வெண்ணெய், நெய், மில்க்ஷேக் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் தொழிலாளர்கள் உலகம் முழுக்க உள்ளனர். இவர்களில் பலர் இன்னும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகவே உள்ளனர்.
Latest Tamil News
பால் பொருட்களை விநியோகம் செய்ய நம்மூர் பால்காரர்கள் சைக்கிள், இருசக்கர வாகனம் பயன்படுத்துவதுபோல மேலைநாட்டு பால்காரர்கள் கார்கள், டெம்போக்களைப் பயன்படுத்துகின்றனர். பால்பொருள் டெலிவரி துறையில் உலகில் லட்சக்கணக்கான பால்காரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நமது அன்றாட உணவுத் தேவைகளுள் பால் முக்கிய இடம்பெறுவதால், பால் சப்ளை தொழிலாளர்களுக்கு விடுமுறையோ, பண்டிகை நாட்களோ கிடையாது. எந்த நாளாக இருந்தாலும் பால்காரர்கள் அதிகாலை விழித்து பணிக்குச் சென்றால்தான் நம்மால் காலை சுடச்சுட காஃபி அருந்த முடியும். எனவே இவர்களுக்கு மரியாதை செலுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (1)

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    இங்கு விவசாயியை மதிக்காது அரசு,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement