Load Image
Advertisement

அடிக்கடி விழுந்து வாரி வைப்பவர்கள் கவனத்துக்கு...

Attention those who often fall down...   அடிக்கடி விழுந்து வாரி வைப்பவர்கள் கவனத்துக்கு...
ADVERTISEMENT
நம்மில் சிலர் அடிக்கடி எதன் மீதாவது மோதிக்கொள்வது அல்லது கீழே விழுந்து எழுவது, படிகளில் தடுக்கி பின்னர் சரியாகப் படியிறங்குவது உள்ளிட்ட செயல்களைச் செய்திருப்போம். இவ்வாறு எப்போதாவது நடந்தால் அது இயல்பான விஷயமென எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சிலர் அடிக்கடி இப்படி எதன்மீதாவது மோதி காயமுற்று சிரமத்துக்குள்ளாவர். இதுபோல நாம் அடிக்கடி சமநிலை இழந்து தடுக்கி விழக்காரணம் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?

1. ஆண்டுதோறும் வயது வித்யாசமின்றி குழந்தைகள்முதல் முதியோர்வரை அனைவரும் எதிர்பாராமல் தடுக்கி விழுந்து காயங்களை ஏற்படுத்திகொள்கின்றனர். உலகம் முழுக்க மருத்துவமனைகளில் இதுபோன்ற எதிர்பாரா விபத்து காரணமாக சிலருக்கு அதிகளவு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று நடக்கும்போது கால்களை சரிசமமாக வைத்து நடக்காததுதான். சிலர் கோணல்மாணலாக பாதங்களை ஊன்றி நடப்பதால் தடுக்கியோ அல்லது வழுக்கியோ விழுகின்றனர்.
Latest Tamil News
2. உலகம் முழுக்க ஈரப்பதம் மிக்க தரைகளில் பாசி படிந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்தப் பாசியால் வழுக்கி விழுவோர் ஏராளம். எனவே மனிதர்கள் கீழே விழ பாசியும் ஒரு காரணம்.

3. சரியான காலணியைத் தேர்வு செய்யாமல் காலின் அளவுக்குப் பொருந்தாமல் மிகப்பெரியதாகவோ அல்லது சிறுயதாகவோ காலணி அணிவதால் பலர் கீழே விழுகின்றனர். முதியோர் சிலர் பார்வை குறைபாட்டால் அடிக்கடி தவறி விழுகின்றனர். எனவே வயோதிகத்தால் ஏற்படும் பார்வைக் கோளாறு தடுக்கி விழுவதற்கு முக்கியக் காரணியாகும்.

4. இன்று கிரானைட், மார்பிள், மாட்பொனைட், டைல்ஸ் உள்ளிட்ட பல பொருட்களில் தரைகள் உருவாக்கப்படுகின்றன. இதுபோன்ற வழுக்கலான வீட்டுத் தரையால் வீட்டில் வழுக்கி விழுவோரும் அதிகம்.

5. இறுதியாக வழுக்கிவிழுவதைப் பற்றிப் பேசும்போது வாழைப்பழத்தோல் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. வாழைப்பழத்தோல் உள்ளிட்ட காய்கறி மற்றும் பழக் குப்பைகளில் காலை வைத்து உலகம் முழுக்க வழுக்கி விழுவோர் ஏராளம்.


வாசகர் கருத்து (1)

  • Nagarajan1 - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    கவனக் குறைவாக இருந்தாலும், தடுமாற்றங்களலாலும் கூட இது ஏற்படலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement