Load Image
Advertisement

நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்!

Will not approve NEET Exemption Bill: Governor   நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்!
ADVERTISEMENT
சென்னை: ''நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு கையெழுத்திட மாட்டேன். 'நீட்' தேர்வுக்கு பின், மருத்துவ கல்வியில் பெரிய ஊழல், முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன,'' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில், 2023ம் ஆண்டு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, கவர்னர் ரவி, கேடயங்களை வழங்கி பாராட்டினார். நீட் தேர்வில், 600க்கும் மேல் மதிப்பெண்களை பெற்ற மாணவ - மாணவியர் பங்கேற்று, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நகைப்பாகிவிடும்



இதையடுத்து, கவர்னர் ரவி பேசியதாவது: நீட் தேர்வில் வெற்றி பெறுவது சாதாரணமானது அல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணம். நாட்டின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தரமான கல்வி இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் போட்டி போட முடியாது என கூறுகின்றனர். தேசிய அளவை விட, தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவர்கள் சதவீதம் அதிகம்; ஆனால், இது போதாது. அடிப்படை கல்வி மட்டுமே போதாது. தரமான உயர் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். தற்போது போட்டி தேர்வுகள் வேண்டாம் என கூறுவது, வருங்காலத்தில் நகைப்புக்கு உரியதாக இருக்கும்.

கடந்த காலங்களில் மாணவர்கள் தற்கொலைகள் நடந்தன. பயந்த மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தினர். பலர் வெற்றி பெற முடியாது என அழுதனர். இன்று நம் மாநிலத்தில் இருந்து, ஒரு மாணவர், நாட்டிலேயே முதல் மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில், நாடு முழுதும் மருத்துவக் கல்லுாரிகள் இரட்டிப்பாகி, அதிக மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாடு நலமாகவும், முன்னேற்றப் பாதைக்கு சென்றால் தான், நாட்டு மக்கள் நலமாக இருக்க முடியும்.

இந்தியாவில் சிறந்த மருத்துவர்கள், மருத்துவ வசதி, குறைந்த செலவில் மருத்துவம் அளிப்பதால், வங்கதேசம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, மருத்துவ சுற்றுலா வருவது அதிகரித்து வருகிறது. மனித நேயத்துடன் நோயாளிகளை நம் மருத்துவர்கள் பார்த்துக் கொள்வதால், நோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், உங்களது பள்ளிக்கு செல்லுங்கள். உங்களது வெற்றி கதை, மற்ற மாணவர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதியிடம்



இதற்கிடையே, பெற்றோர் வரிசையில் அமர்ந்திருந்த அம்மாசையப்பன், 'தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்?' என, கவர்னரிடம் கேட்டார்.

இதற்கு கவர்னர் ரவி அளித்த ஆவேச பதில்: நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு, எப்போதுமே கையெழுத்திட மாட்டேன். மேலும், கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை, ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன். நீட் தேர்விற்கு, 'கோச்சிங் சென்டர்' சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும்போதே, நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்யலாம்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, மாணவர்கள் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும்.

அரசியல்



நீட் தேர்வுக்கு முன், அரசு பள்ளி மாணவர்கள், 100 முதல் 200 பேர் மட்டுமே மருத்துவக் கல்லுாரிகளில் படித்தனர். நீட் தேர்வு வந்த பின், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. கடந்த 2019 - 20ல், நீட் தேர்வுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த பின், தற்போது 600 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக, நீட் தேர்வு தொடர்பாக, எந்த தற்கொலையும் நடக்கவில்லை. ஆனால், முன்பெல்லாம் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறுவதும், ஒரு கட்சி தலைவர், 10 லட்சம், மற்றொரு கட்சி தலைவர், 20 லட்சம் ரூபாய் வழங்குவதும் வழக்கமாக இருந்தது.

அரசியல்வாதிகளின் அரசியலுக்கு மாணவர்கள் பலியாகினர். நீட் தொடர்பான தவறான புரிதலை கைவிட வேண்டும். நீட் தேர்வு, மாணவர்களை போட்டி திறன் கொண்டவர்களாக உருவாக்குகிறது. மருத்துவ படிப்பு என்பது, 1,000 கோடி ரூபாய் வரையிலான வணிகமாக இருந்தது. தற்போது, இது தடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியில் ஊழல், முறைகேடுகள் தடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆதங்கம் இருக்கிறது!'



கவர்னரிடம் கேள்வி எழுப்பிய அம்மாசையப்பன் கூறியதாவது: 'நீட்' தேர்வால், 15 பேர் வரை இறந்துள்ளனர். என் மகள், நீட் தேர்வில், 623 மதிப்பெண் பெற்றுள்ளார்; செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கை கிடைத்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக, தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என சொல்கிறோம். அதை மாணவர்கள் எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் தான் திணறுகின்றனர். அதற்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. எல்லா பெற்றோருக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. இந்த நீட் தேர்வில் இருந்து, எப்போது எங்களுக்கு விடுதலை கிடைக்கும் என கவர்னரிடம் கேட்டேன். ஆனால், அவர் முடியவே முடியாது என்று மறுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (48)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    அண்ணாமலையின் நடைப்பயணம் பற்றியே தமிழகமெங்கும் பேச்சு .. அதை திசை மாற்ற கவர்னரின் பேச்சு கயவர்களுக்கு கிடைத்துவிட்டது ...

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    யார் எங்கே செத்தாலும் அவர்கள் நீட் ஐ எதிர்த்து செத்ததாக டிராமா போடும் கேவலமான செயலை திராவிடா ஸ் செய்வது வேதனைக்குரியது ....

  • Jai -

    நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக அரசாங்கம். இன்னைக்கு அது ஏதோ பிஜேபி கொண்டு வந்த திட்டம் போல் காண்பித்து அதற்கு எதிற்ப்பும் தெரிவிக்கிறார்கள். கவர்னர் இதற்கு சரியான பதில் கொடுக்கவில்லை. அவர் ஏற்கனவே கையெழுத்து போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார். அதை முதலில் கூறியிருக்கலாம்.

  • venugopal s -

    இது நாள் வரை இவரை எதிர்த்து யாரும் கேள்வி கேட்காததால் இவர் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டு இருந்தார். இந்த மீட்டிங்கில் அந்த மாணவியின் தந்தை எதிர்த்து கேள்வி கேட்டவுடன் அவரைப் பேச விடாமல் மைக்கை பிடுங்கி கொண்டனர்.இனி மேல் மக்கள் ஆளுநரை நன்றாக வைத்து செய்வார்கள்!

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    நீங்கள் எல்லாம் நீதிபதியினால் குட்டு வாங்காமல் திருந்த மாட்டீர்கள். ஏற்கனவே இரண்டு முறை வாங்கியாச்சு, இனியும் எத்தனை முறையோ ? ஆனால் மாற்றுக் கருத்து கூறினால் மாணவ பெற்றோரின் மைக்கை புடுங்குவது, பேசக்கூடாது என்று சொல்வது அநாகரீகம், விரைவில் மக்கள் சரி செய்வார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement