காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளை களைவதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22வது கூட்டம் புதுடில்லியில் நேற்று (ஆக.,11) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழகத்திற்கு 38 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்தது. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், 'காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை. நீர் இருப்பு இருந்தும் கர்நாடக அரசு நீர் திறக்கவில்லை. நீர் திறக்க நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கோரினோம்; மேலாண்மை ஆணையம் 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்க ஆணையிட்டுள்ளது' என்றார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், 'மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் கர்நாடகாவில் போதிய அளவில் தண்ணீர் இல்லை. போதிய மழை பெய்யாததால் கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை. பிரச்னையை இருதரப்பினரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்' எனக் கூறினார். தமிழகம் சார்பில் தண்ணீர் திறக்க முறையிடப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முதல்வர் மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (69)
சரியான சரித்திரம் புடிச்சவனுங்க .... இவங்க வந்தாலே காவேரி பிரச்னையும் வந்துவிடும். குமாரசாமியும், பா.ஜ.க வும் இருக்கும்வரை இந்த பிரச்சினையே இல்லை. மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் மங்களூர், உடுப்பி, முருடேஸ்வரா, கோகர்ணா போன்ற பகுதிகளுக்கு சென்றேன். எல்லா இடத்திலும் மழையோ மழை. உடுப்பி மாவட்டத்தில் மட்டும் அவ்வளவு நதிகள். எல்லாவற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வீணாக கடலில் கலக்கிறது. நதிகளை இணைத்தால் அந்த நீர் பள்ள மாநிலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். நதிகளை இணைக்கை ஏன் எந்த அரசும் நாட்டம் காட்டுவதில்லை. இப்பொழுது தமிழ் நாடு மற்றும் கர்நாடகா இடையே எப்பொழுதும்போல் தண்ணீர் பங்கீட்டிற்காக சண்டை. நதிகள் இணைக்கப்பட்டிருந்தால், இந்த சண்டை ஏட்படவே ஏட்பட்டிருக்காது. ஆட்சியாளர்கள் ஏன் இதை புரிந்துகொள்வதில்லை. அதாவது நதி நீர் இணைப்பு பற்றி.
இங்கே வீரவசனம் பேசும் ஸ்டாலின் அங்கே போனபோது நம்பியது ஏன். இவருக்கு ராகுல் நண்பர்தான் அவரிடம் கூற வேண்டியதுதானே. இங்கு காங்கிரஸ் ஏன் வாயை திறக்க வில்லை
ஏன் நேரடி பேச்சில்லை i தமிழ் இந துரோகி aala thaguthi atravangal .அவனும் எதுவும் TMC alavil solvathillai
நாளை காலை ஸ்டாலினும் துரை முருகனும் மெரினாவில் உண்ணாவிரதம்