ADVERTISEMENT
நாங்குநேரி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிகளுக்கு 17 வயதில் (12ம் வகுப்பு) ஒரு மகனும், 14 வயதில் (9ம் வகுப்பு) ஒரு மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் இருவரும் படித்து வருகின்றனர். பள்ளியில் சக மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் இந்த மாணவன் ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 9ம் தேதி பள்ளி நிர்வாகத்தினர், மாணவனின் பெற்றோரை தொடர்புகொண்டு பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற மாணவனிடம் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். இதைகேட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் அடங்கிய கும்பல் இரவு 10 மணியளவில் பெருந்தெருவில் உள்ள மாணவனின் வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற தங்கையையும் அவர்கள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த இருவரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர், இடைநின்ற 2 மாணவர்கள் உள்பட 6 பேரை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர். 6 பேரும் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்து (24)
மாணவர்கள் ஜாதிவெறிக்கும் குடிக்கும் அடிமையானதுதான் திராவிட மாடல்.
ஏழைகளுக்கு உதவுங்கள் , பசித்த வயிறு இருக்க கூடாது , தனி மனிதனுக்கு உணவு கிடைக்க வேண்டும்.
ஜாதியை ஒழிக்க முன்வருமா இந்த அரசு ? ஜாதிக் கட்சிகளை தடை செய்ய வேண்டும்.
should call the parliament immediately
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
It is for the parents to nurture and make children to grow in the right way ....Dravida Model or CM cannot come to you each house to take tuition...