ADVERTISEMENT
கடந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.46 லட்சம் இந்தியர்கள், தங்களது பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு தொழில், படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக செல்லும் இந்தியர்கள், அந்தந்த நாட்டின் குடியுரிமை பெறுகின்றனர். இந்திய குடியுரிமை சட்டம் 1955ன் படி, இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமைக்கு அனுமதி இல்லை. எனவே இந்தியாவில் பெற்ற பாஸ்போர்ட்டை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஒப்படைப்பது வழக்கம்.

அந்தவகையில், ராஜ்யசபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் அளித்த பதிலில் கூறியதாவது:-
2014 முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 580 இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துள்ளனர். மாநிலங்கள் வாரியாக, அதிகபட்சமாக டில்லியை சேர்ந்த 60,414 பேர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துள்ளனர். அடுத்ததாக பஞ்சாப்பை சேர்ந்த 28,117 பேரும், குஜராத்தை சேர்ந்த 22,300 பேரும், கோவாவை சேர்ந்த 18,610 பேரும், கேரளாவை சேர்ந்த 16,247 பேரும் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துள்ளனர்.
மேலும், 2019 முதல் 2022ம் ஆண்டு வரை, 35 நாடுகளில் 24,000 இந்தியர்கள் தங்களது
பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (15)
அயல் நாட்டு வாழ்க்கை இப்போ நன்றாக இல்லை . வாழ்க்கை உயிருக்கு உத்ரவாதமில்ல்லை. .
இந்தியா மேலே அவ்ளோ பாசம். இவிங்கதான் அந்நாட்டு சங்கிகள்.
வெளிநாடுகளில் ஜாதி பற்றிய விவரங்களை கேட்பதில்லை .
அமெரிக்காவில் படிக்கும் இடங்களில் இன ஓடுக்கீடு முறை செல்லாது என அன்னாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தாக செய்தி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இஙகு உள்ளது போல் வயதானவர்களுக்கு இன்சூரன்ஸ் மற்ற சௌகரியங்கள் இல்லை.. வரி காட்டுபவன் சம்பளம் பெறுபவன். அதைய்ய அனுபவிப்பவன் முக்கால் வாசி ஆப்பிரிக்கா நாட்டு காரர்களும் பாகிஸ்தான் இரான் துருக்கி ஆப்கானிஸ்தான் போனற நாடுகளிலிருந்து வந்து அகதிகள் என்ற ஸ்டேட்டஸ் பெற்று இலவச வசதி பெறுகிறார்கள். இலங்கை அகதிகளும் உண்டு.