Load Image
Advertisement

காலமானார் ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃபிரட்கின்; தி எக்ஸார்ஸிஸ்ட் படத்தின் சிறப்புகளை அறிவோம்..!

Hollywood director William Friedkin dies; Lets know the special features of The Exorcist..!   காலமானார் ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃபிரட்கின்; தி எக்ஸார்ஸிஸ்ட் படத்தின் சிறப்புகளை அறிவோம்..!
ADVERTISEMENT
பிரபல ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃபிரட்கின் ஆக., 7-ஆம் தேதி தனது 87 ஆவது வயதில்
காலமானார். அவரது பிரஞ்சு கனெக்ஷன் படம், ஐந்து ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது. டு லிவ் அண்ட் டை இன் எல்ஏ, பக், கில்லர் ஜோ உள்ளிட்ட பலர் படங்களை வில்லியம் இயக்கியிருந்தாலும் 1973 ஆம் அண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'தி எக்ஸார்சிஸ்ட்' ஹாரர் படம் இன்றுவரை உலக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளதை மறுக்கமுடியாது.

தி எக்ஸார்ஸிஸ்ட் படத்துக்கு பல சீக்வெல்கள் வந்துவிட்டன. வரும் அக்டோபர் மாதம் 'தி எக்ஸார்ஸிஸ்ட், பிலீவர்' என்னும் சீக்வல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் வில்லியம் இயக்கத்தில் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக இல்லாத 70-களில் வெளியான முதல் எக்ஸார்ஸிஸ்ட் படமே இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று வருகிறது.
Latest Tamil News
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் பிறந்த வில்லியம், 4 நான்கு திருமணங்கள் முடித்து அதில் மூன்று மனைவிமார்களை விவாகரத்து செய்தவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இத்தனை பெண்களை அவர் கடந்து

வந்திருந்தாலும் அவரது ஆல் டைம் ஃபேவரைட் பெண் என்றால் அது 'தி எக்ஸார்சிஸ்ட்' படத்தில் ரீகன் என்னும் பேய் பிடித்த பெண்வேடமேற்ற நடிகை லிண்டா பிளையர்தான்..!
Latest Tamil News
1973 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் நடித்துவந்த 13 வயதே நிரம்பிய குழந்தை நட்சத்திரம் லிண்டா பிளையர். அதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டிய லிண்டாவை, ஆங்கில கெட்ட வார்த்தைகளைப் பேசி, ஆடைகளைக் கிழித்து, தன்னைத்தானே நகங்களால் கீறி காயப்படுத்திக்கொண்டு, கலர்கலராக வாந்தி எடுக்கும் கொடூர பேய்பிடித்த சிறுமி வேடத்துக்கு ஆடிஷன் செய்தார் வில்லியம்.

இதுபோன்ற கதாபாத்திரத்தை இதற்கு முன்னர் ஏற்காத லிண்டா பிளயருக்கு தி எக்ஸார்ஸிஸ்ட் கதை பீதியைக் கிளப்பியது. வில்லியம் இந்தக் கதாப்பாத்திரம் குறித்து பொறுமையாக விளக்கி அவரை கதாபாத்திரத்தோடு ஒன்றச் செய்தார். பைபிளில் சாத்தான் குறித்து கூறப்பட்ட பல விஷயங்களை இப்படத்துக்காக கற்றுத்தேர்ந்த வில்லியம், சாத்தான் ஆக்கிரமித்த சிறுமி, ஏசு கிறிஸ்துவையும் மேரி மாதாவையும் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளில் வசைபாடும் காட்சிகளை தைரியமாக படத்தில் இடம்பெறத் செய்தார்.
Latest Tamil News
லிண்டா பிளயர் வித்யாசமான கோணங்களில் உடலை வளைத்து எட்டுக்கால் பூச்சிபோல தலைகீழாக மாடிப் படியிறங்க, நடக்க ஸ்டன்ட் கலைஞர்களைக் கொண்டு பயிற்றுவித்தார். சாத்தான், சிறுமி உடலில் புகுந்ததால் உடல் நிறம் வெளிறிப்போய், கண் விழிகள் நிறம் மாறுவதைக் காட்சிபடுத்த சிறுமி லிண்டாவுக்கு சிறப்பு பேய் மேக்கப் போட்டு கண்களில் லென்ஸ் வைத்து கோரைப் பற்களுக்கான பல் செட்டையும் பொருத்தி நடிக்க வைத்தார். இப்படத்தில் பேய் ஓட்டும் பாதிரியாரை பயமுறுத்த சிறுமி ரீகனின் தலை 360 டிகிரி கோணத்தில் சுற்றிவரும்.
Latest Tamil News
இதற்காக லிண்டா போலவே பேய் வேடமிட்ட பொம்மையை உருவாக்கி அதில் மோட்டார் பொருத்தி தலையை சுழல வைத்தார் வில்லியம். இந்த பொம்மை மூச்சு விடுவதுபோலக் காட்டுவதற்காக படப்பிடிப்பு செட் முழுவதையும் குளிர்பதன இயந்திரம் கொண்டு குளிர்வித்தார். அந்த காலகட்டத்தில் ஒரு படத்தில் இந்த அளவு தொழில்நுட்ப மெனக்கெடல்களை எந்த ஹாலிவுட் இயக்குநரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement