Load Image
Advertisement

லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்

 Inspector sacked in bribery case    லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்
ADVERTISEMENT
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம் வாங்கிய புகாரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இளையான்குடி அருகே உள்ள சீராத்தங்குடியில் 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அப்பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ரூ.30 லட்சத்தை காரில் கொண்டு சென்றுள்ளார். அப்போது இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ்காரர் கார்மேகக்கண்ணன் ஆகியோர் முத்துக்குமார் காரை மறித்து சோதனை செய்துள்ளனர். அதில் பணத்தை மறைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.

முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அவரிடம் இருந்து இருவரும் பணம் பெற்றனர். முத்துக்குமார் தன்னிடம் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ்காரர் கார்மேகக்கண்ணன் லஞ்சம் வாங்கியதாக சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ் கார்மேகக்கண்ணன் மீது துறை ரீதியான சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில் இதுகுறித்து மதுரை டி.ஐ.ஜி., பொன்னி விசாரணை நடத்தினார். இருவரும் லஞ்சம் பெற்றது உறுதியானது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலாஜியை பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி., உத்தரவிட்டார். போலீஸ்காரர் கார்மேகக்கண்ணன் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பாலாஜி இறுதியாக மதுரையில் பணிபுரிந்த போது இக்குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருந்தார்.


வாசகர் கருத்து (4)

  • chails ahamad - doha,கத்தார்

    அரசு ஊழியர் எவராக இருப்பினும் லஞ்சமோ , ஊழலோ , மதவாத பேதமோ , எதுவாகயிருப்பினும் , உண்மையாக இருப்பின் நிரந்தர பணி நீக்கம் செய்வதே மேலாகும்.

  • Gajageswari - mumbai,இந்தியா

    நல்ல அரசு அதிகாரிகள் கரை கூட படியாதவர்களாக இருக்க வேண்டும்

  • Sekhar - Tirunelveli ,இந்தியா

    பணியிடைநீக்கம் என்பதையே அகராதியில் நீக்கி, அதிசீக்கிரம் நன்கு விசாரித்து பணிநீக்கம் செய்து தண்டணையை அதிகரித்து குற்றங்களைக் குறைக்கலாமே

  • venkatakrishna - Trichy,இந்தியா

    எத்தனை பேரை ஊழல் வழக்கில் நீக்குவீங்க.மொத்த தமிழக அரசு ஊழியர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை மூலம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வது நல்லது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement