Load Image
Advertisement

" கலாசாரம் மிகுந்த மாநிலம் தமிழகம் " - ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு

Madras University where 6 Presidents studied: President Drarubathi Murmu    " கலாசாரம் மிகுந்த மாநிலம் தமிழகம் " - ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு
ADVERTISEMENT

சென்னை: ‛‛ சென்னை பல்கலையில், ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் உள்ளிட்ட 6 ஜனாதிபதிகள் படித்துள்ளனர் '' என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
Latest Tamil News
அப்போது அவர், வணக்கம் எனக்கூறி தனது உரையை துவக்கினார். தொடர்ந்து பேசுகையில், பல நூற்றாண்டுகளாக திருக்குறள் நம்மை வழிநடத்துகிறது. வளமான கலாசாரம், நாகரீகம் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தின் கோயில் சிற்பங்கள், மனித குலத்தின் திறமைக்கு சான்றாக அமைந்து உள்ளது. தமிழகம் கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக உள்ளது.
Latest Tamil News

6 ஜனாதிபதிகள் படித்த பல்கலை.,



பாலின சமத்துவத்திற்கான கோயிலாக சென்னை பல்கலை திகழ்கிறது. நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு பங்காற்றி உள்ளது. பல தலைவர்கள், நோபல் பரிசு வென்றவர்களை உருவாக்கி உள்ளது. சென்னை பல்கலை., எண்ணற்ற வெற்றியாளர்களை உலகிற்கு அளித்து உள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு பல வழிகளில் சேவை புரிந்துள்ளது.
Latest Tamil News

ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் உள்ளிட்ட 6 ஜனாதிபதிகள் இந்த பல்கலை.,யில் தான் படித்துள்ளனர். சர். சிவி ராமன், வெங்கட்ராமன் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் இங்கு படித்துள்ளனர். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.



வாசகர் கருத்து (10)

  • அப்புசாமி -

    முர்மு அவர்கள் கையால் பட்டம் குடுக்கப்படும் என்று நூற்றுக்கணக்கான மாணவர்களை அறைகளில் அடைச்சி வெச்சிட்டு, பேதுக்கு சில பேர்களுக்கு மட்டும் பட்டம் குடுத்துட்டு எஸ்கேப் ஆன தலிவர்களை என்ன செய்யலாம்? மாணவர்களை இப்பிடி நடத்தினால் நாடு எப்பிடி உருப்படும் ?

  • அப்புசாமி -

    வணக்கம் சொல்லிட்டாரு. பெரிய தமிழறிஞர்தான். ஸ்டாலின் பேசுனது இவருக்கு புரியாது. இவரு பேசுனது மக்களுக்குப் புரியாது. இன்னொருத்தர் ஆங்கிலத்திலேயே தமிழைப் புகழ்ந்து பேசிடுவாரு. மொத்தத்தில்....

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    கலாசாரம் மிகுந்த மாநிலமாக தமிழகத்தை மிகவும் சிறப்பாக உயர்ந்த இடத்தில் உள்ளதற்கு ஆட்சி செய்யும் திராவிட கட்சிகளே காரணம்.

  • Karthikeyan K Y - Chennai,இந்தியா

    ஆசிரியராக பணியாற்றி, பல இன்னல்கள், சோகங்கள், இழப்புகள், சந்தித்து, பிரம்மா குமாரியுடன் சேர்ந்து, சொத்துக்களை வாங்கும் பென்ஷன் வரை அர்ப்பணித்து சேவை புரிந்து, மாணவர்களிடையே பேசுவது உண்மையான ஊக்கம் தரும்.

  • எஸ் எஸ் -

    இவர்கள் பெயரை கேட்டாலே திராவிட இயக்கதினருக்கு அலர்ஜி ஆயிற்றே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement