Load Image
Advertisement

திராவிட கொள்கைக்கு கவர்னர் விளம்பரம் செய்கிறார்: ஸ்டாலின்

சென்னை: -''கவர்னர் ரவியின் பேச்சு, திராவிட கொள்கைக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து வருகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Latest Tamil News

பேராசிரியர் நன்னன் நுாற்றாண்டு நிறைவு விழாவில், குழந்தைகளுக்கான, 16 நுால்களை வெளியிட்டு, அவர் பேசியதாவது:

இந்தியாவை கைப்பற்ற ஸனாதன சக்திகள் துடிக்கின்றன. இந்த நேரத்தில், ஈ.வெ.ரா.,வின் வரலாற்றை, 21 மாநில மொழிகளில் புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்து இருக்கிறோம்.

தமிழகத்தை போல, திராவிட இயக்கம், தங்கள் மாநிலங்களில் இல்லையே என்ற ஏக்கம், மற்ற மாநிலத்தவருக்கு வந்துள்ளது.

ஸனாதனம், வர்ணாஸ்ரமம் குறித்து, கவர்னர் ரவி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவர் தொடர்ந்து பேசினால் தான், திராவிட கொள்கையை நாம் வளர்க்க முடியும்; பிரசாரம் செய்ய முடியும்.
Latest Tamil News
கவர்னரின் பேச்சு, திராவிட கொள்கைக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து வருகிறது.

'வாழ்க வசவாளர்கள்' என அண்ணாதுரை சொன்னதை தான் நானும் சொல்ல வேண்டி இருக்கிறது. கவர்னர் தொடர்ந்து இங்கு இருக்க வேண்டும்.

பேராசிரியர் நன்னன் நுால்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படும். அவரது உறவினர்கள் கோரிக்கை வைக்காமல், இதை நான் செய்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


வாசகர் கருத்து (39)

 • sethusubramaniam - chennai,இந்தியா

  கிச்சு கிச்சு மூட்டாதீங்க... .. உங்களுக்கே என்னானு தெரியாத திராவிட கொள்கைகளை கவர்னர் எப்படி எதிர்க்க முடியும்.

 • Asokan -

  ஏம்ப்பா 50 வருஷ பழைய nut போல்ட் யா இன்னும் நீ ஸ்பானர் போட்டு டைட் பண்ணிட்டு இருக்க...... அது முன்னமே புட்டுகிச்சி புதுசா எதாவது போட்டு டைட் பண்ணு சரியா

 • theruvasagan -

  கும்மிடிபூண்டி தாண்டி திராவிட மாடல் போணியாகாது என்பது இவர்களுக்கே நன்றாக தெரியும். ஆரிய திராவிட கட்டுக்கதைகளை நம்புவதற்கு டாஸ்மாக்கால் மூளை மழுங்கடிக்கப்பட்ட டுமிலன்சை தவிர வேற எங்கேயும் ஆளே கிடையாது.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  பாவம் கற்பனை உலகலத்திலேயே மிதந்துகொண்டிருக்கிறது இந்த திராவிடிய ஆட்சி இன்னும் சிறிது நாட்களிலேயே புஸ் ஆகி குடும்பத்தோடு சிறை செல்லப்போகிறோம் என்கிற யதார்த்த நிலையை புரிந்துகொள்ள முடியவில்லை. எதோ பினாத்தட்டும், ஆனால் ஒன்று முக்கியம், போனமுறை ராசாவை கைது செய்து கேஸ் நடத்தி பின் மொத்த பணத்தோடு வெளியே விட்டதை போல இல்லாமல், இந்த முறை, கொள்ளை பணத்தை முழுவதுமாக ஜப்தி செய்யவேண்டும். தக்காளி ஒரு திராவிட பயல்கள் கிட்டேயும் காசை விட்டுவைக்கக்கூடாது. அப்படி செய்தால், இந்த கும்பல் அடியோடு ஒழிக்கப்படும், மீண்டும் தலையெடுத்து தேர்தலில் நிற்க துணியமுடியாது. வேரோடு அறுத்து எறியப்படவேண்டிய கும்பல்

 • Mayuram Swaminathan - Chennai,இந்தியா

  ஆரியம் திராவிடம் என்று சொல்லி மக்களை குழப்பத்தில் இருப்பவர்களை தெளியவைக்கவேண்டியது அவசியம்தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்