ADVERTISEMENT
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த காசவளநாடு புதூர் கிராமத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை கிராம விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு மொஹரம் பண்டிகையையொட்டி காசவளநாடு கிராமத்தில் ஹிந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாட்களுக்கு முன்பு விரதத்தை துவக்கினர்.
வீடுகளில் புது மண் கலயம் மற்றும் புது பாத்திரங்களில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லா சாமியை கிராம மக்கள் வரவேற்றனர். இன்று (ஜூலை 29) அதிகாலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி எடுத்து செல்லப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சை மாலை மற்றும் பட்டுதுண்டை சாத்தி வழிபட்டனர். பின்னர் மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும் அங்கு தீமிதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இது குறித்து காசவளநாடு புதூரை சேர்ந்தவர்கள் கூறும்போது, இஸ்லாமியரின் பண்டிகையான மொஹரம் பண்டிகையை ஹிந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடி வருகிறோம்.
. இவ்விழாவை ஹிந்துக்கள் கொண்டாடும்போது இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். எங்கள் ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் மொஹரம் திருவிழாவின்போது பிறந்த வீட்டிற்கு வந்து பானகம் தயாரித்து வழங்குவதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். என்றனர்.
வாசகர் கருத்து (19)
எங்க ஊரிலும் இப்படி கொண்டாடினார்கள் என்னடா அருவாளை எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தை சொருகி மசூதிக்கு செல்கிறார்களே என்று பார்த்தேன்
இதை அந்த ஊர் இஸ்லாமியர்கள் பொறுக்க காரணம் அப்படியாவது மார்க்கத்துக்கு பலர் வரட்டுமே என்பதுதான் .... அவர்களுக்கே இஸ்லாமிய கோட்பாடுகள் புரிந்திருக்க வாய்ப்பில்லை .... இது போன்ற முதிர்ச்சியற்ற மாக்கள் வந்தால் இஸ்லாத் சந்திசிரித்து விடும் ....
மொஹரம் கொண்டாடப்படுவதில்லை, அனுசரிக்கப்படுவது. அது ஒரு சோக நிகழ்வு. இதை ஷியா முஸ்லிம்கள் மட்டுமே அனுசரிப்பார்கள். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியாவில் இது அனுசரிப்பதில்லை, ஏன்னென்றால் அவர்கள் சன்னி. நம் ஊரில் உள்ளவர்கள் ஷியாவா? சன்னியா? அவர்களுக்கே தெரியாது.
மதநல்லிணக்கம் என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.இதெல்லாம் வேண்டாத வேலை தேவையில்லாதது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
எல்லாமே ஒரு வியாவாரம்.