திருவள்ளூர் மாவட்டத்துக்கு பொறுப்பு நீதிபதியாக உள்ள, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கடந்த 8ம் தேதி, புழல் மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
பின், 25ல், நீதிபதி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக சட்டப் பணிகள் ஆணைய குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, சிறைத் துறை டி.ஜி.பி., அம்ரேஷ் பூஜாரி மற்றும் சிறைத் துறை டி.ஐ.ஜி.,க்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புழல் மத்திய சிறையில் கைதிகளை பார்வையிட வருவோர் அமரும் அறையில், கூடுதல் மின்விசிறி, கூடுதலாக பார்வையாளர் அறை வசதி ஏற்படுத்த வேண்டும்; சிறைக்கு வரும் பெண் பார்வையாளர்கள், பெண் வழக்கறிஞர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லை; ஏற்கனேவே உள்ள ஆண் பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள் சுகாதாரமற்று காணப்படுகின்றன.
அதேபோல, சிறையில் உள்ள கழிப்பறைகளும் சுகாதாரமற்ற முறையில் உள்ளன; அவற்றை நாளொன்றுக்கு இரு முறை சுத்தப்படுத்த வேண்டும்.
சிறைக் கைதிகளுக்கு, கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நிதியை, உடனே அரசு வழங்குவதோடு, கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படும் பொருட்களையும் வழங்க வேண்டும்.
சிறையில் உள்ள ஜன்னல்களில், தரமான கொசு வலை அமைப்பதோடு, சிறை உணவகங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, தரமான உணவு வழங்குவது அடிப்படை உரிமை.
சிறையில் தாயுடன் இருக்க அனுமதிக்கப்பட்ட ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, சத்தான உணவுகள் வழங்குவதுடன், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மழலையர் பள்ளிகளை துவக்க வேண்டும்.
நடவடிக்கை
சிறைக்கு வரும் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களுக்கு, 'லாக்கர்' வசதி ஏற்படுத்த வேண்டும். சிறைக் கைதிகளுக்கு, உயிர் காக்கும் மருந்துகளை தடையின்றி வழங்குவதை, சுகாதாரத் துறை செயலர் உறுதி செய்ய வேண்டும்.
அவை தடையின்றி வழங்கப்படுகிறதா என்பதை, சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
நீதிமன்ற ஜாமின் கிடைத்தும், பிணைய தொகை செலுத்த முடியாத காரணத்தால், சிறையில் தொடர்ந்து இருக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு மாறாக, சிறையில் அதிகளவில் காவலர்களை பணி அமர்த்தக் கூடாது; சட்டத்துக்கு மாறாக சிறைக் கைதிகளை துன்புறுத்தல், கூடுதல் தண்டனைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சட்ட உதவிகள் கிடைக்காத கைதிகள் குறித்த விபரங்களை, சட்டப் பணிகள் ஆணைய குழு சேகரித்து, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தொழிலாளர் சட்டப்படி, சிறைக் கைதிகளுக்கான ஊதியத்தை சரிவர வழங்கவேண்டும்.
வெளிநாடுகளை சேர்ந்த சிறைக் கைதிகளை, அவர்களின் உறவினர்கள் பார்வையிட வசதியாக, உரிய விதிகளை வகுக்க, மாநில உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ளது போல, சிறைக் கைதிகளுக்கு 'தாம்பத்ய உரிமை' வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இந்த தீர்மான நகலை, அரசுக்கு அனுப்பி வைக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
வாசகர் கருத்து (72)
இந்தமாதிரி சில விஷயங்களில் அவர்கள் கஷ்டப்பட வேண்டும் , அதன் மூலமாவது அவர்கள் திருந்தட்டும் என்பதற்குத்தான் சிறை தண்டனை. இல்லாவிட்டால் சிறைக்குள்ளேயே வீடுகளை கட்டி, அதில் கைதிகளை குடும்பத்துடன் தங்க செய்யலாமே. கைதிகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்.
விஷேஷ சாப்பாடு கூட கூடாது . இதில் இது வேற ?. விளங்கிடும்
இது போன்ற உல்லாச வாழ்க்கைக்கு சிறையில் வழியில்லை என்றொரு பார்வையிலும் இதுவரையில் குற்றங்கள் குறைந்திருக்கலாம் அந்த வாய்ப்பிருக்கையில் நீதிபதிகளே இது போல் பரிந்துரை செய்வது வெட்கக்கேடு இந்த சிறைத்துறை வசதிகளுக்கு காரணமான செந்தில் இனிமேல் அந்த செந்திலாண்டவன் வடிவாகவே பார்க்கப்படலாம். மோடி அரசு செய்த முட்டாள்தனம் அரசியல் இவையே இதற்கு காரணம் இந்த வழக்கு இல்லாமலிருந்தால் இது போல கருத்துக்களுக்கு வாய்ப்பிருந்திருக்காது சிறைக்கு வெளியிலிருக்கும் அனைத்தும் உள்ளேயே கிடைக்குமென்றால் சிறைத்தண்டனை எதற்கு இனி கைது விசாரணை தண்டனை என எதுவுமே தேவையில்லையே அரசுக்கு செலவு குறையுமே என்ன காவற்துறை சிறைத்துறை அதிகாரிகள் நீதிபதிகளுக்கு வழக்கறிஞர்களுக்கு வேலை போகும் உயர் பதவியில் இருப்பவர்கள் சிறைக்குச் செல்ல எது சிறப்பான வழியென்று பாடம் எடுக்கலாம் நாட்டில் குற்றம் புரிவது எப்படியென்று கற்றுக் கொடுக்க கல்லூரிகள் தொடங்கும் எதுவுமே குற்றம் இல்லையென்பதால் குற்றம் இல்லாத நாடாக இந்தியா மாறும் இறைவனிடம் பயபக்தி, பெற்றோர்கள் ஆசிரியர்கள் மேல் மதிப்பு காவற்துறைதண்டனை சிறை குறித்த அச்சம் நல்ல பெயர் கெட்டுப்போகுமோ என்ற அச்சம் உறவினர் சுற்றம் சமுதாயம் ஒதுக்கி வாய்க்குமோ என இப்படிப் பல வகையில் குற்றங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்ட நிலையில் இவரது கருத்து பாராட்டத்தக்கது
ஜெயிலுக்கு போவது தண்டனை அனுபவிக்கதற்கு என்பது மாறி நல்ல சாப்பாடு, தாம்பத்யம் , குளிர்சாதனப்பெட்டி என்று லிஸ்ட் நீளுகிறது. அப்படியே கேட்டுச்ச்சொல்லுங்களேன் உள்நாடு மற்றும் வெளிநாடு உல்லாசப்பயணம் போக முடியுமான்னு
இனி குற்றங்களுக்குத் தக்கவாறு அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும். அபராதம் கட்ட முடியவில்லையெனில் எச்சரித்து விட்டு விட வேண்டும். சிறைகளையெல்லாம் மருத்துவமனைகள், கல்லூரிகள் , அரசு அலுவலகங்களாக மாற்றவேண்டும். சிறைச்சாலைத் துறையை ஒழித்துவிட்டு அவர்களுக்கும் காவல்துறையில் பணிநியமனம் செய்யவேண்டும். ஆட்டுக்கறி, கோழிக்கறி, பொழுதுபோக்குவசதிகள் , மனைவியுடன் குடும்பம் நடத்த வசதிகள்னு சிறை தண்டனையை கேலிக்கூத்தாக்கறதைவிட விட இது பரவாயில்லை. நல்லவேளை ,கல்யாணமாகாத குற்றவாளிகளுக்கு ஏற்பாடு பண்ணி கொடுக்கணும்னு சொல்லலை.