அதன் பின், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, பார்லிமென்டில் ஜனாதிபதியின் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பிரதமர் மோடி பேசுகையில், 'எங்கள் ஆட்சி மீது, 2023ல் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்' என, தெரிவித்தார்.
இதை உண்மையாக்குவதை போல, பா.ஜ., ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் இன்றைக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி உள்ளன. பிரதமரின் அந்த 2019ம் ஆண்டு காணொளி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கருப்பு ஆடை!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் துவங்குவதற்கு முன், அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுவரை பிரதமர் கருத்து தெரிவிக்காததை கண்டித்து, 'இந்தியா' எனப்படும் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இரு சபைகளுக்கும் இன்று கருப்பு ஆடை அணிந்து வர முடிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து (39)
மோடி அவர்கள் தலைமையில் பாஜக வரும் 2028 ல் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு உள்ளது!
பரவாயில்லையே
//மணிப்பூர் கலவரம் குறித்து பல மாதங்கள் முன்னரே ராகுல் பேசியது//.... ஆக, பிளான் சக்ஸஸ்புல்...
முதலில் பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலையை அப்புறப்படுத்துங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும், ஆவூன்னா மொள்ளமாரிகள், ஊழல் பேர்வழிகள், திருட்டு கூட்டம், காட்டிக்கொடுப்பவன், கைக்கூலி, கொள்ளையடிப்பவன், தேசத்துரோகி போன்ற கேடுகெட்ட இழிபிறவிகள் கூட்டம் அதன் முன்பு அமர்ந்து போராட்டம் என்கிற பெயரில் கடுப்பேத்துகிறார்கள்.........
கான்க்ரேஸ் கட்சிக்கு சரியான வழி காட்டுதல் இல்லாமல் எப்படி வினய்யய் ஆற்றுவது என்று தெரியாமல் பாவம் குழம்பி போய்க்கொண்டிருக்கிறது