Load Image
Advertisement

பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல்: வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கின

Rs 70 lakh cash seized from Ponmudi house: Foreign currencies also seized   பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல்: வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கின
ADVERTISEMENT

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ததில் ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் இன்று (ஜூலை 17) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரம் மற்றும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீடுகளில் சோதனை நடத்தினர். கடந்த 2006-11ல் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அதில் ஏதேனும் முறைகேடு செய்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை செய்கிறதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Latest Tamil News
இருப்பினும், இந்த சோதனையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், ரூ.10 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.


வாசகர் கருத்து (44)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    பேச்சு மட்டும் யோக்கியர் மாதிரி வாய் கிழிய பேசவேண்டியது. செய்வது அத்தனையும் பிராடுத்தனம். வெளிநாட்டு கரன்சியை இவர் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

  • naranam - ,

    சமூக நீதி காப்பவர்! ஏழைகளின் காவலன்! தமிழினத் துரோகி! அடுத்த இலாகா இல்லாத அமைச்சர் தயார்!

  • kumar c - bangalore,இந்தியா

    குடும்பத்தின் mind வாய்ஸ் :டேய் எங்கிட்ட 50L னு சொன்ன இப்ப என்னடானா 70L மாட்டிஇருக்கு . எனக்கு தெரியாம இதெல்லாம் கூட நடக்குதா .

  • theruvasagan -

    ரெய்டு எல்லாம் ஜாலியா போயிட்டிருக்கு என்கிற கமென்ட்டை இன்னொரு தடவை கேட்டு மகிழ ஆவலாக உள்ளோம்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஒரு மனிதனுக்கு ஆசை சிறிதளவு இருக்கவேண்டும். ஆனால் பேராசை கூடவே கூடாது. இவ்வளவு கொள்ளை அடித்து வைக்கிறார்கள். இறந்தவுடன், அவர்கள் உறவினர்கள் அந்த இறந்தவரின் உடலை ஊர்வலமாக எடுத்து மெரினாவில் புதைக்க இடம் கேட்டு அழுகிறார்கள். இது தேவையா? ஊழல்வாதிகளே, நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்களா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement