Load Image
Advertisement

72 வயது இளைஞர் மோடியை கண்டு வியக்கும் அதிகாரிகள்

Officials are surprised to see 72-year-old Modi    72 வயது இளைஞர் மோடியை கண்டு வியக்கும் அதிகாரிகள்
ADVERTISEMENT
புதுடில்லி: பிரதமர் மோடியின் செயல்பாடுகளை கண்டு, அவர், 72 வயதிலும் இளைஞர் போல் செயல்படுகிறார் என, டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் பேசுகின்றனர்.

காலையில் 7:00 மணிக்கே தன் அலுவலகத்திற்கு மோடி வந்துவிடுவாராம். முதலில் நாளிதழ்களை ஒரு கண்ணோட்டம் பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை கவனிப்பாராம்.

பின் வாழ்த்துகள், தலைவர்களுக்கு கடிதங்கள் என ஒரு நாளைக்கு 400 கையெழுத்துக்கள் போடுவாராம் மோடி. பின் மீட்டிங் என புதுடில்லியில் இருக்கும் போது தினமும் படு பிசியாக இருப்பார்.

இதற்கு நடுவே தன் உதவியாளரை அழைத்து 'நோட்ஸ் டிக்டேட்' செய்கிறார். பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு உதவ 40 உதவியாளர்கள் உள்ளனர். இவர்கள், மூன்று ஷிப்ட்களில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். இந்த 40 உதவியாளர்களில் 8 நபர்கள் பிரதமர் எங்கு போனாலும் உடன் செல்வர்.

'இதுவரை எத்தனையோ பிரதமர்கள் வந்து சென்றுவிட்டனர்; ஆனால் மோடியின் வேகத்திற்கு யாரும் இணையாக முடியாது; புல்லட் ரயில் போல செயல்படுகிறார் என, பிரதமர் மோடியின் திறமை குறித்து ஆச்சர்யத்துடன், அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து (16)

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    காலத்தின் அருட்கொடை மோடிஜி நீண்ட காலம் ஆண்டு நாட்டை வல்லரசு ஆக்கவேண்டும் , ஊழல்வாதிகள் அப்புறப்படுத்த வேண்டும் நல்லதே நடக்கும்.

  • s sambath kumar - chennai,இந்தியா

    வேணுகோபால் சாருக்கு மோடி பற்றி ஏன் கவலை? உங்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் ஊழல் பற்றியே கவலை.

  • Selva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    நாங்கள் திமுகவினர் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. கமிஷன், கலெக்ஷன் என்று வந்து விட்டால் எங்கள் வேகத்தைப் பார்த்து மோடியே அசந்து விடுவார் தெரியுமா.

  • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

    திராவிட தலைவன் ஸ்டாலின் 24 மணி நேரமும் வேலை செய்பவர் ... தூங்குவதே இல்லை அவரின் அமைச்சர்கள் தூங்க விட்டதானே ஹா ஹா ஹா

  • venugopal s -

    என்ன செய்வது,எல்லாம் பதவி படுத்தும் பாடு! இப்படி எல்லாம் பேசவில்லை என்றால் பதவி காலியாகி விடும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement