நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மரக்கிளை வெட்டினாலும் 6 மாதம் சிறை: சீமான்
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மரக்கிளையை வெட்டினால், மனிதர்கள் கையை வெட்டியது போன்ற குற்றமாக கருதி, ஆறு மாத சிறை தண்டனை விதிப்போம். வீடு கட்ட ஒரு மரம் வளர்க்க வேண்டும். உங்கள் தோட்டத்தில் வெட்டுவதாக இருந்தால் கூட கலெக்டரிடம் அனுமதி பெற்று தான் வெட்ட முடியும். அதற்கு நீங்கள், 100 மரம் நட்டு பாதுகாத்தால் தான், ஒரு மரம் வெட்ட அனுமதிப்போம்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்வு போன்றவற்றை ஒருங்கிணைத்து, 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போது, நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது, கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக்கல்வி அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு முறை, மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும், பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை, கணிசமான அளவு உயர்த்தி இருப்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, மருத்துவ கல்வி கட்டண உயர்வை, தமிழக அரசு திரும்ப பெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
சென்னை மண்டலத்தில், 78 சார் - பதிவாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மாற்றத்துக்கான காரணத்தை, அவசியத்தை, தமிழக அரசு விளக்க வேண்டும்; இல்லையெனில் லஞ்சம், ஊழல் காரணத்திற்காக மாற்றம் நிகழ்ந்தது என்பது உறுதியாகும்.
பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பேட்டி:
'மோடி நல்லது செய்தார்' என, இங்குள்ள 'ஜால்ரா' போடுபவர்கள் கூறுகின்றனர். 'அப்படி எதுவும் செய்யவில்லை' என, தொண்டர்கள் கூறுகின்றனர். ஹிந்துக்கள் ஒற்றுமையாக செயல்பட்டால், மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. வெள்ளைக்காரர்கள் நம் கலாசாரத்தை கெடுத்துச் சென்றனர். அதை மீட்க மறுமலர்ச்சி, ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், ஹிந்துக்களிடம் வந்துள்ளது. அதற்காக, பா.ஜ.,விற்கு ஓட்டுகள் கிடைக்கும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமல்ல; விருப்ப தகுதியாகவே இருக்கும். அதே நேரத்தில், தேசிய தகுதி தேர்வு அல்லது மாநில தகுதி தேர்வு என ஏதாவது ஒன்றில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என, பல்கலை மானிய குழு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றதால், உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்து விடலாம் என, நினைத்துக் கொண்டிருப்போரின் வேலை வாய்ப்புகளை இந்த முடிவு கடுமையாக பாதிக்கும்.
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
மருத்துவர் தினத்திற்காக முதல்வர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'மருத்துவர் நலனுக்கான அனைத்தையும் அரசு செய்து கொடுக்கும்' என்றார். கடந்த ஆண்டு மருத்துவர் தினத்தில், 'இது மக்களுக்கான அரசு மட்டுமல்ல; மருத்துவர்களுக்கான அரசும் தான்' என்றார். ஆனால், இதுவரை மருத்துவர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாததுடன், போராடும் மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்பது தான் வருத்தமான உண்மை.
த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை:
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்போம்' என்றல்லாம், கதை கதையாக பேசியவர்கள், இன்று விலைவாசியை கட்டுப்படுத்தாமல், 'மாமன்னன்' படம் பார்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து (17)
முதலில் உங்களது உண்மை அடையாளத்தை தெரியப்படுத்தவும். தாங்கள ஒரு மலையாளி என்ற கருத்து வெகுநாட்களாக உள்ளது
திரும்பவும் முதல்ல இருந்தா சைமன் அண்ணே? வேண்டாம்னே நாடு தாங்காது. நீங்கள் போடப்போகும் சட்டம் எல்லாம் நல்லது சரியானது. மத்த அரசோ கொண்டுவந்த சட்டங்கள், கொண்டுவர முற்பட்ட திட்டங்கள் எல்லாம் கெட்டவை, குறிப்பிட்ட சிறு சமூகங்களுக்கு கேடு விளைவிப்பவை. இந்த சீமான் சொல்லும் சட்டத்தை ஒருவேளை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ கொண்டுவந்திருந்தால் இதே சீமான் அண்னே "இது தனி நபரின் சுதந்திரத்திற்கு எதிரானது" "என் வீட்டுல நான் செடி வச்சேன், மரம் வளர்த்தேன், அதை வெட்டிட்டு வேற மரம் கூட வளர்ப்பேன் அது என் இஷ்டம்" ரசாங்கம் எப்படி எனக்கு உரிமை என்று என்று சொல்வாய்?. இதெல்லாம் காலக்கொடுமை" என்றெல்லாம் சொல்லிருப்பார்.
உங்கள் இயக்கம் கொண்டு எதாவது தொண்டு, மக்களுக்கு செய்கிறிர்களா? சீமை கருவேல மரங்ககளை அழிக்கும் படை அமைத்து நம் தமிழ்னாட்டில் உள்ள சீமை கருவேல மரங்களை கொண்டு பல பல குட்டி பவர் ப்ளன்ட் அமைத்து நாட்டிற்கு நல்லது செய்யும் இயக்கமாகி, மக்களை கவருங்கள.வெரும் வாயில் வடை சுடாதீர்கள் சார் .நன்றி .வணக்கம்
இப்போ நீங்கள் உடுறா கயிறை போல முன்பே ஒரு எலி கும்பல் பீலா உட்டு விட்டு இப்போ எலி கடிச்சி கொதரி வலைக்கெ கேடு வந்துதிடிச்சி.
அப்போ ஆடு, மாடு மேய்க்கும் அரசாங்க வேலைக்காரர்கள் குழை ஒடிக்க எங்கே போவது? 😄