உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணிபுரிந்தார். அவரது பதவி நேற்று முன்தினம் பறிக்கப்பட்டு, காவல் துறையின் தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலி பாஸ்போர்ட்
இவர், 2018, ஜூன் மாதத்தில் இருந்து, 2020 ஜூலை வரை, மதுரை போலீஸ் கமிஷனராக இருந்தார். டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி ஏற்ற பின், 2019, ஜூன் மாதம், மதுரையில் இருந்து போலி பாஸ்போர்ட் வாயிலாக, இலங்கைக்குச் செல்ல முயன்ற முத்துராமன் என்பவர், குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார். பின், 2020, ஜனவரியில், துபாய்க்கு செல்ல முயன்ற பரமசிவம் என்பவரையும் கைது செய்தனர்.
இவற்றில், 58க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள், இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதற்கு முன், போலி பாஸ்போர்ட் வாயிலாக, இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர்கள், வெளிநாடுகளுக்கு சென்றதும் கண்டறியப்பட்டது. இந்த போலி பாஸ்போர்ட் விவகாரம் பின்னணியில், மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் இருப்பதும் தெரியவந்தது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அவர், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவரின் கட்டுப்பாட்டில் தான், எஸ்.பி.சி.ஐ.டி., மற்றும் 'கியூ' பிரிவு இருந்தன. இதனால், முறைகேடு தொடர்பாக அவரை விசாரிக்க, நெருங்க கூட முடியவல்லை.
குற்றச்சாட்டு
இந்தப் பிரச்னையை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் அம்பலப்படுத்தினார். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும், போலி ஆவணங்கள் வாயிலாக, 54 பேருக்கு பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'டேவிட்சன் தேவாசீர்வாதம் கொடுத்த அழுத்தம் காரணமாக, அவர் கீழ் பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகள், போலி ஆவணங்களை இணைத்து, பாஸ்போர்ட் கோரிய விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்ததுபோல ஒப்புதல் அளித்துள்ளனர்' என, அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். பா.ஜ., சார்பில், கவர்னர் ரவியிடம் மனுவும் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 'முறைகேட்டில் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு நேரடி தொடர்பு இல்லை. அவர் குற்றமற்றவர்' என உத்தரவிட்டது.
இதனால் அவர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். 'என் கைகள் சுத்தனமானவை. துளியும் சம்பந்தம் இல்லாத குற்றச்சாட்டுகள் தினமும் என்னை கொல்கின்றன. என் குடும்பத்தினரும் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். விருப்ப ஓய்வு பெற்று சென்று விடலாம் என நினைக்கிறேன்' என புலம்பி வந்தார். ஆனாலும் சென்னை போலீஸ் கமிஷனர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வந்தார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் வராகி என்பவர் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மே 24ல் புகார் அனுப்பினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: டேவிட்சன் தேவாசீர்வாதம் 'பவர்புல்' பதவியான உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ளார். போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக அவரிடம் எஸ்.பி.சி.ஐ.டி. மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரிக்கவே இல்லை.
அவர் மதுரை கமிஷனராக இருந்தபோது அவரது மனைவி ஜுனிதா எபினேசர் சென்னை நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புதல் மற்றும் சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனம் நடத்தினார். இந்த நிறுவனம் வாயிலாக தான் முறைகேடு நடந்துள்ளது. மனைவிக்காக போலி ஆவணங்கள் வாயிலாக இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக தனக்கு கீழ் பணிபுரிந்த மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
ஒரு பார்போஸ்ட் ஆய்வு தொடர்பாக காலை 10:00 மணிக்கு அவரின் கவனத்திற்கு வருகிறது. 10:10 மணிக்குள் ஆய்வு முடிந்து பாஸ்போர்ட் அலுவலகத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலி ஆவணம் வாயிலாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் பயங்கவாதிகளாக இருக்கலாம். இதனால் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஜூன் 14ல் அனுப்பியுள்ள கடிதத்தில் 'டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
என்.ஐ.ஏ. விசாரணை
இதற்கிடையே போலி பாஸ்போர்ட் புகார்தாரரான வராகியிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அவரது மனைவி மற்றும் மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
'டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி பறிக்கப்பட்டுள்ள பின்னணி இது தான்; சென்னை போலீஸ் கமிஷனராக ஆக வேண்டும் என்ற அவரது கனவும் தகர்ந்தது' என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (37)
இவரை உண்டு இல்லை என்று பண்ணவேண்டும்.ஆடிய ஆட்டம் என்ன?
பதவியில் நீடிக்கிரார்கள்.
அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல உதவியது
அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒருவருக்கு எதற்கு கூடுதல் டி.ஜி.பி., பொறுப்பு? அவர் மீது உள்ள களங்கம் போகும்வரையில் அவருக்கு எந்த பதவியும் கொடுக்கக்கூடாது.
எண்பது சதமானம் ஹிந்துக்களாம் தமிழகத்தில்.. எண்பது சதமானம் உயர் பதவிகள் யாரிடம்? இது எப்படி நடக்கிறது? பெரும்பான்மையினர் நசுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது..