ADVERTISEMENT
சென்னை : அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி, தினமலர் இதழுக்கு எதிராக, மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் ஹென்றி டிபேன் தாக்கல் செய்த வழக்கை, சென்னை இரண்டாவது கூடுதல் விரைவு கோர்ட், தள்ளுபடி செய்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்; இவரது மனைவி எஸ்தர்ராணி. இவரை தாக்கி நகைகளை பறித்து சென்றதாக சிலரை போலீசார் தேடி வந்தனர். அவர்களில் இருவர், மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோர்ட்டில் வாரன்ட் பெற்று, 2003, நவ., 3ல் மக்கள் கண்காணிப்பகத்தில் சிவகாசி டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தினமலர், 2003, நவ., 6 இதழில், "குற்றவாளிகளை தேடி, மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் போலீஸ் சோதனை' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. மறுநாளும் செய்தி வெளியானது.
இச்செய்தி, அவதூறு ஏற்படுத்துவதாகக் கூறி மக்கள் கண்காணிப்பகம் மற்றும் ஹென்றி டிபேன் சார்பில், தினமலர் இதழுக்கு எதிராக, அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அதில், "செய்திகளை வெளியிட்டதற்காக, 11 லட்ச ரூபாயை, தினமலர் நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டது.
வழக்கு, நீதிபதி ரவிந்திரபோஸ் முன் விசாரணைக்கு வந்தது. தினமலர் சார்பில், வழக்கறிஞர் இளம்பாரதி, "செய்தி வெளியிட்டதில் அவதூறு ஏதுமில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார். அதை ஏற்று வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!