Load Image
Advertisement

லஞ்ச பெருச்சாளிகள்.. இந்த நாட்டை பீடித்துள்ள சாபக்கேடுகள்!

Bribery .. the curses of this country!   லஞ்ச பெருச்சாளிகள்.. இந்த நாட்டை பீடித்துள்ள சாபக்கேடுகள்!
ADVERTISEMENT

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:



என்.கேசவன், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் உள்ள அறிவியல் நகரின் துணைத் தலைவராக பணிபுரிந்து வரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி மலர்விழி மீது, கிராம ஊராட்சிகளுக்கு வரி ரசீது புத்தகங்கள் வாங்கியதில், 1.31 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, வழக்குப்பதியப்பட்டு உள்ளது. இவர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக முன்னர் பணியாற்றிய போது, இந்த ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனால், இவரது வீடு உட்பட, 10 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

அரசு பணியில் உள்ள ஆண் அலுவலர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் துணிச்சலாக கை நீட்டி, லஞ்சம் வாங்குவர். பெண்கள் இதுபோன்ற, 'ஈன'ச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது, பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை, சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து, அதன் மீது பலகையை வைத்து ஆணி அடித்து மூடுவது போன்ற சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

நாடு விடுதலை பெறுவதற்கு முன், புதுமை பெண்கள் பற்றி கனவு கண்ட முண்டாசு கவிஞன் பாரதி, தான் இயற்றியகும்மிப்பாட்டில், பின் வருமாறு குறிப்பிடுகிறார். அதாவது...
Latest Tamil News
'பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி...' என்றார்.

'எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண்' என்று, அந்த முண்டாசு கவிஞனே, பெண்களை, ஆண்களுக்கு இணையாக பெருமைப்படுத்தி பாடியதால், தற்போது, 'ஆண்களுக்கு நாங்கள் கிஞ்சிற்றும் இளைத்தவர்களோ, சளைத்தவர்களோ அல்ல...' என்ற பரந்த விரிந்த நோக்கத்தில், பெண்களும் தைரியமாக, துணிச்சலாக ஊழலில் ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், இந்த மலர்விழி ஐ.ஏ.எஸ்.,

மாதம், 1 லட்சம் முதல், 2 லட்சம் வரை ஊதியமாக வாங்கினாலும், அதுவும் போதாது என்று முறைகேடுகளில் ஈடுபட்டு, லஞ்ச ஊழலில் திளைக்கும் பெண் அதிகாரிகளை காணும் போது, மாதம், 1,000 அல்லது, 2,000 வாங்கி, குடிசைகளில் குடியிருக்கும் துாய்மை பெண்கள், தாங்கள் பணிபுரியும் போது கிடைக்கும் விலை மதிப்புள்ள பொருட்களையும், நகைகளையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்து, உரியவர்களிடம் சேர்த்து விடுமாறு கைகூப்பி நின்று கோரும் போது, பெருமையாக இருக்கிறது.

உண்மையில், இவர்கள் தான் பாரதி பாடிய புதுமை பெண்கள். மலர்விழி ஐ.ஏ.எஸ்., போன்ற லஞ்ச பெருச்சாளிகள், இந்த நாட்டை பீடித்துள்ள சாபக்கேடுகள்.


வாசகர் கருத்து (63)

  • srinivasan - stockholm,சுவீடன்

    Rats don't do corruption. Why insult them ? Why link rats to corruption?

  • Saisenthil - Salem,இந்தியா

    இதை மறுப்பது என்பது கேவலமான செயல்... பெண்கள் தான் இந்த லஞ்ச பிரச்சனை காரணம்.... சலுகை வேற

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    லஞ்சப் பெருச்சாளிகள் மட்டுமில்லை, மேல் சாதி, தாழ்ந்த சாதிகள் என்ற வேறுபாடுகள் மற்றும் தீண்டாமை யெல்லாம் மேலும் இந்திய நாட்டை பீடித்துள்ள பெரிய சாபக்கேடுகள். ஒருவேளை ஊழல்கள் செய்வது குறைந்தாலும் எஞ்சிய இந்த இரண்டு சாபக் கேடுகளிலிருந்து மக்கள் விடுபடுவது குறையாது.

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    பரம்பரை அரசாங்க உத்தியோகத்தர்கள் நாட்டை பீடித்துள்ள சாபக்கேடுகள்

  • raj -

    These criminals should be hanged. Judiciary process should be amended so that people will be afraid to do. Is this service to the nation.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்