Load Image
Advertisement

எம்.பி., பதவியில் இருந்து மாஜி பிரதமர் விலகல்

 Former Prime Minister resigns as MP    எம்.பி., பதவியில் இருந்து மாஜி பிரதமர் விலகல்
ADVERTISEMENT

லண்டன் : பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்க கட்சியின் பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக, கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன், 2019 முதல், 2022 வரை இருந்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தின் போது, கட்டுப்பாடுகளை மீறி, மது விருந்து கொடுத்ததாக எழுந்த புகாரில், பிரதமர் பதவியில் இருந்து அவர் விலக நேரிட்டது.

இந்நிலையில், கட்சியின் எம்.பி.,க்கள் குழு இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்துஉள்ளது.

மது விருந்து தொடர்பாக பார்லிமென்டில் பொய் தகவல்களை தெரிவித்ததால், போரிஸ் ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்க அந்தக் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், அதன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, போரிஸ் ஜான்சன் எம்.பி., பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். 'அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது' என, அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (3)

  • பேசும் தமிழன் -

    அப்படியே ...உக்ரைன் போய் செட்டிலாகி விடு !!!

  • அப்புசாமி -

    இவர் மானஸ்தன்.

  • தமிழன் - கோவை,இந்தியா

    இங்கும் நிறைய பல்லு போனது பகுடு போனதுகள் எழுந்து நடக்கக் கூட முடியாததுகள் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்