Load Image
Advertisement

ஹிந்து சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு

 Forced marriage of Hindu girl; Court refusal to send with parents     ஹிந்து சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு
ADVERTISEMENT

கராச்சி: பாகிஸ்தானில், 14 வயதான ஹிந்து சிறுமியை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து, பாக்., நீதிமன்றம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்பவரது மகள், சோஹானா சர்மா குமாரி, 14.

இந்த சிறுமி, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம், 'டியூஷன்' படித்தார்.

டியூஷன் சொல்லிக் கொடுக்கும் நபர், சமீபத்தில் அந்த சிறுமியின் வீட்டுக்கு, ஒரு கும்பலுடன் வந்து, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார். பெற்றோர் கெஞ்சி கேட்டும், சிறுமியை விடவில்லை.

இது குறித்து திலீப் குமார், போலீசில் புகார் அளித்தார். ஐந்து நாட்களுக்குப் பின், அந்த சிறுமியை போலீசார் மீட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது அந்த சிறுமி, டியூஷன் சொல்லிக் கொடுத்த நபர், தன்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பெற்றோருடன் அனுப்பி வைக்கும்படியும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதி, 'அந்த சிறுமி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போதைக்கு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது.

'பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட முடியாது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை, அந்த சிறுமியை காப்பகத்தில் தங்கியிருக்க உத்தரவிடுகிறேன்' என்றார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


வாசகர் கருத்து (9)

  • Sudarsan R -

    Dont know why hindus,are in Pakistan and why they are not mass converted to Islam. Perhaps its a sadist pleasure to kidnap rape or marry Hindus, like eating cows and goats and camels

  • பேசும் தமிழன் -

    எல்லோரும் டாஸ்மாக் மூலம் மட்டையாகி விட்டீர்களா ???

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    இத்தனை கொடுமைகள் நடந்தும், அங்கே வறுமை கோர தாண்டவம் ஆடும் நிலையிலும் பல ஹிந்துக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வர முயலுவதில்லை.... இந்நிலை எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது ....

  • pandi - Chicago,யூ.எஸ்.ஏ

    தர்மத்தின் தலைவன் மு க ஸ்டாலின் நாளை பாகிஸ்தான் சென்று, நேரிடை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்பின் ஐ. நா. செல்வார். திரும்பி வர நாளாகும்.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    மத சார்பற்ற திராவிட மத மாற்றிகளுக்கு இந்த செய்தியை கொடுத்து படிக்க சொல்லனும். மதத்தின் பெயரால் உள்ள இவனுங்க கட்சிதான் மத சார்பில்லாத கட்சியாம்.. இந்த செய்தியை பற்றி எந்த திராவிடனும் வாயை திறக்க மாட்டான் ...ஆனால் திராவிடன் லட்ச தீவுக்கு ஆதரவு பதிவு ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்