ADVERTISEMENT
புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் அரசு பங்களாவை புதுப்பிப்பதற்கு, 45 கோடி ரூபாய் அரசு பணத்தை செலவு செய்துள்ளார். கண்ணாடி மாளிகை என அழைக்கப்படும் இந்த பங்களாவை வெளிநாட்டு பொருட்கள் தான் அலங்கரிக்கின்றன.
இந்நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒரே குரலில் ஆடம்பர கண்ணாடி மாளிகையின் செலவிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காங்கிரசின் மூத்த தலைவர் அஜய் மாக்கன், கெஜ்ரிவாலை அனைத்து விஷயங்களிலும் எதிர்த்து வருகிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கண்ணாடி மாளிகையை இடிப்போம் என்கிறார் அவர்.
புதுடில்லி மாநில அரசின் உயர் அதிகாரிகள் நியமன விஷயத்தில் கெஜ்ரிவால் அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதை மாற்ற, மத்திய அரசு அவசர சட்ட மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதாவிற்கு, ஆறு மாதத்திற்குள் பார்லிமென்டின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இந்த சட்டத்திற்கு எதிராக ராஜ்யசபாவில் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டு கெஜ்ரிவால், அனைத்து பா.ஜ., அல்லாத முதல்வர்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இவருக்கு காங்., ஆதரவு தரக் கூடாது என வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் அஜய் மாக்கன். இதனால், காங்., இதுவரையிலும் தன் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் கெஜ்ரிவாலை சந்திக்க வேண்டும் என கேள்வி எழுப்புகிறாராம் மாக்கன். இதனால், தி.மு.க., - எம்.பி.,க்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக பார்லி.,யில் ஓட்டளிப்பரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வாசகர் கருத்து (3)
காங்கிஸிற்கு தீமுக அடிமையா
கேஜ்ரியை காங்கிரஸில் விட்டால் பாத்திரக்கடைக்குள் புகுந்து எலி கதை ஆகிவிடும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
என்ன செய்வது பிரதமர் ஆகி இந்தியாவையெ சுருட்டும் எண்ணம். இனம் இனத்துடன் தான் சேரும். ஆனால் கன்று அதனுடைய நட்பு கன்றுடன் தான் இருக்க வேண்டும். மற்றது எப்படி போனால் என்ன?