ADVERTISEMENT
புவனேஸ்வரம்; ஒடிசா ரயி்ல் விபத்திற்கு இன்டர் லாக்கிங் அமைப்பு மூடப்பட்டதே காரணம் என சி.பி.ஐ., விசாரணையில் திடுக் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் பாலேசார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்தில் 288 பேர் பலியாயினர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்த குறித்து சி.பி.ஐ., வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியான தகவலில் விபத்து நடந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததில், கணினி முறையில் இயங்கும் இன்டர் லாக்கிங் அமைப்பு மூடப்பட்டதாலும், ரயில் நிலைய அதிகாரி கணினி முறையில் இயங்கும் இன்டர்லாக்கிங் அமைப்பை மூடிவிட்டு, கிரீன் சிக்னல் கொடுத்ததால் இந்தவிபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு அந்த விசாரணையில் தெரியவந்தது.
வாசகர் கருத்து (19)
ஒரே நாடு ஒரே மொழி ஒரே சிக்னல்
வெளிநாட்டு எதிரிகளை ராணுவம் துரத்திவிட முடியும். ஆனால் உள்நாட்டு துரோகிகளை யாராலும் ஓன்றும் செய்ய முடிவதில்லை.
இந்தியாவின் நவீன வந்தே பாரத் ரயிலின் வருகையை ஒரு சில நாடுகள் விரும்பவில்லை...இதில் பல விஷயங்கள் உள்ளன..இது ஒரு மிக பெரிய சதி செயல்...இந்திய தொழில் நுட்பம், வெளிநாடுகளில் வளர்வதை தடுக்க ஏற்படுத்த பட்ட செயல்.
அந்த நாலஞ்சு தீவிரவாதிகளை கண்டு புடிச்சாச்சா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இன்டர்லாக்கிங் பராமரிப்புக்கு வழி இல்லாமல் பழுதாகி இருக்கும்.