ஆம் ஆத்மியை பின்பற்றும் காங்கிரஸ், பாஜ.,: டில்லி முதல்வர் கெஜ்ரிவால்
புதுடில்லி; காங்கிரஸ் மற்றும் பாஜ., ஆம்ஆத்மி கட்சியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறது என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் கொடுக்கும் திட்டத்தினை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் துவக்கி வைத்தார். இதுவரை 1.25 கோடி பெண்கள் இத்திட்டத்திற்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்தத் தொகையின் மூலம் பெண்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என சவுகான் கூறினார்.
இது தொடர்பான வீடியோவை, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து, கெஜ்ரிவால் மேலும் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி காட்டிய பாதையில் காங்கிரஸுடன் பாஜ.,வும் செல்லத் துவங்கியது. காங்கிரஸ் மற்றும் பாஜ., ஆம்ஆத்மி கட்சியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸின் உத்தரவாதங்கள் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையின் நகலாகும். இப்போது மத்திய பிரதேசத்தில் பாஜ., ஆம் ஆத்மி காட்டிய வழிப்பாதையில்
செல்ல துவங்கி இருப்பது நல்ல விஷயம்தான். எங்களுக்கு கட்சி நலம் முக்கியம் அல்ல. மக்களின் நலம் தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (10)
அவர் மக்கள் என்று கூறுவது விடியலாயர் போல் அவரது குடும்பம், நெருங்கியவர்களையே குறிப்பிடும் நாட்டு மக்களையல்ல
MO doubt, Kejriwal has become a centre stage figure. 2024 election will make him still more popular
காங்கிரஸும் பிஜேபியும் ஆம் ஆத்மீ கட்சியின் கொள்கைகளை பின்பற்றுகிறது என்றால்,கேஜரிவால் இந்த இரு கட்சிகளையும் ஏன் எதிர்க்கிறார்?
மக்கள் நலனே முக்கியம், வாழும் புத்தர் சிறையில், சிசோடியா அப்ரூவர் ஆகிறார், திருமதி கெஜ்ரி விரைவில் முதல்வர் ஆவார்
கட்சியை விடமக்கள் நலமா..நாங்கள் நம்ப அன்னா ஹசாரே கள் அல்ல