Load Image
Advertisement

குஜராத்தில் ஓடிய தமிழக பஸ்சில் தாவி ஏறி திருட்டு

Movie-style heist on tourist bus in Gujarat   குஜராத்தில் ஓடிய தமிழக பஸ்சில் தாவி ஏறி திருட்டு
ADVERTISEMENT

கோவை: கோவை கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர், சந்திராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28 ல் 18 நாள் பயணமாக காசி, சாய்பாபா கோயில் உள்ளிட்ட ஆன்மிக தளங்களுக்கு தனியார் பஸ்சில் சென்றனர். 7 ம் தேதி ஒடிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டனர். காலையில் அங்குள்ள தங்கும் விடுதி அருகே நின்ற போது பஸ்சின் மேல் வைக்கப்பட்டிருந்த உடமைகள் பல காணவில்லை.
பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதிகாலை 2 மணியளவில், தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது, டூவிலரில் வந்த 3 பேரில் ஒருவர், ஓடும் பஸ்சில் தாவி ஏறி உடமைகளை கீழே தள்ளிவிட்டது பதிவாகியிருந்தது.

கீழே விழுந்த உடமைகளை மற்றொருவன் சேகரிக்க, டூவீலரை ஓட்டி வந்த நபர், பஸ்சில் ஏறிய நபரை அழைத்து கொண்டு திரும்பினான். சுற்றுலா சென்றவர்கள், முக்கியமான பொருட்களை பஸ் உள்ளே வைத்திருந்ததால் அவை தப்பின. பைகளுக்கு இடையே வைக்கப்பட்டு இருந்த ரூ.25 ஆயிரம் தப்பியது.


வாசகர் கருத்து (8)

  • THANGARAJ - CHENNAI,இந்தியா

    குஜராத் திருடர்கள் நிறைந்த இடம் என்று சொன்னால், நம்மை தேர்தலில் நிற்க தடை விதித்து விடுவார்கள், இந்த செய்தி மற்றும் புகாரை திரு. அண்ணாமலை, H.ராஜா, பாஜக தமிழக கவர்னர்கள் எல்லோருக்கும் அனுப்பி, குஜாரத்தில் நடவடிக்கை எடுக்க சொல்லுங்க. இது ஒரு நிகழ்ச்சி தான், அப்படியானால் தினமும் நெடுஞ்சாலைகளில் பல குழுக்கள் பிரிந்து, சேர்ந்து இது போன்ற திருட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை இந்த சம்பவம் உறுதி செய்கிறது.

  • amuthan - kanyakumari,இந்தியா

    இது குஜராத் மாடல்

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    Gujarat is the state with special futures in all manners in India..

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    உத்தர பிரதேஷில், இந்த மாதிரி விஷயங்களை கட்டுப்படுத்தத்தான் முதல்வர் யோகி அவர்கள் மிகக்கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

  • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

    இந்திக்காரனுங்க எப்படிப்பட்டவனுங்கறதை இப்பவாச்சும்... இங்கே சுத்துற மாக்கான்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொதுப் பேருந்தில் ஆன்மீக சுற்றுலா போறவனுங்க அதானியும், அம்பானியுமா போவானுங்க...? ஏதோ ஏழையெளியவர்கள், நடுத்தர மக்கள் போவார்கள்... அவனுங்க பொருளையே திருடுறானுங்களே... இந்த குஜராத்திகள். அதுல உடுத்துற துணிகள்தானய்யா இருக்கும். பொன், வெள்ளி நகைகளா இருக்கும். இதைப் போய் திருடியிருக்கிறானுங்களே இந்திக்காரனுங்க... அப்ப, அவனுங்க எப்பேர்பட்ட பிச்சைக்காரனுங்களா இருப்பானுங்க பாருங்க... பிச்சை எடுத்தானாம் பெருமாளு, அதைப் புடுங்குனானம் அனுமாரு...ங்கற கதையா. இதுல வேறே... இந்திக்காரனுங்க அத்தன பேரும் யோக்கியனுங்க... அறிவாளிங்க... நல்லவனுங்க அப்படீன்னு உருட்டுறானுங்க இங்க சுத்துற சங்கிகள்... தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் மட்டுமே அறிவாளிகள், உழைப்பாளிகள், அடுத்தவன் பொருளை அபகரிக்காதவர்கள்... இங்க இருக்குறது ஒண்ணு சொல்லி இருக்கு, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை...ன்னு இந்திக்கார மாநிலங்களில் தினந்தோறும் காலை முதல் இரவு வரை பெண் குழந்தைகள், இளம் பெண்கள், முதிர் பெண்கள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை, கோர்ட்டுக்குள்ளேயே சுட்டுத் தள்ளுவது போன்ற உலகத்தில் உள்ள அத்தனை சட்டம்-ஒழுங்குக்கு புறம்பான செயல்கள் இலட்சக்கணக்கான நிகழ்வுகள் தினசரி இந்திக்கார மாநிலங்களில் நடைபெறுகிறது... குறிப்பாக குஜராத், உ.பி. போன்ற மாநிலங்களில் அதிகம். காரணம்... அந்தளவிற்கு அங்கு வாழும் மக்களிடம் வறுமை ருத்ர தாண்டமாடுகிறது... வறுமை, பசியின் காரணமாக அந்த மக்கள் போறவ வர்றவனையெல்லாம் அடிச்சி புடுங்கி திங்குறான்... அவனுக்கு பழைய சோறு கிடைச்சாலும், உடுத்திய பழைய துணி கெடச்சாலும் விடமாட்டேங்குறான் அபகரிக்குறான்... இதுல இங்கு சுத்துறதுக... தமிழ்நாட்ல வசிக்குற அத்தனை பேரும் கள்ளனுங்க, முட்டாளுங்க..ங்றானுங்க. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான ஊர்கள் தமிழ்நாடுதான்... அதைப்போலவே அறிவாளிகள், திறமைசாலிகள், உழைப்பாளிகள், ஜேப்படி அடிக்காதவர்கள், அடுத்தவன் பொருளை ஆட்டய போடாதவர்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதை இந்நிகழ்வு மூலமாவது உணர்ந்து கொள்ளுங்கடா பக்கீங்களா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement