கார்கே குற்றச்சாட்டில் உண்மையில்லை: பாஜ., எம்.பிக்கள் பாய்ச்சல்

ஒடிசாவில் 3 ரயி்ல்கள் அடுத்தடுத்து சிக்கிய சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து, கார்கே பிரதமர் மோடிக்கு, ரயில்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொறுத்த வேண்டும். பணியிடங்கள் காலியாக உள்ளது என 10 கேள்விகளை முன்வைத்து, கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சதானந்த கவுடா, தேஜஸ்வி சூர்யா, பி.சி. மோகன் மற்றும் முனிசாமி உள்ளிட்ட 4 பாஜ., எம்.பிக்கள் கார்கேவின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் பாஜ., எம்.பிக்கள் கூறியிருப்பதாவது:
உண்மை எதும் இல்லை. குற்றச்சாடடுகள் அனைத்தும் வார்த்தை அளவில் தான் உள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் முதலீடுகள் குறித்த கேள்விகளை எழுப்பி இருந்தீர்கள்.
கடந்த 9 ஆண்டுகளில் எங்களது மொத்த பாதுகாப்புச் செலவு ரூ. 1,78,012 கோடி என்பது உங்கள் காலத்தில் 2.5 மடங்கு செலவாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மிகவும் மோசமாகச் செயல்பட்ட பிறகு, ரயில் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு விரிவுரை செய்ய உங்களுக்கு எப்படி எண்ணம் வந்தது என்பது வேடிக்கையாக உள்ளது.
கட்டாயம் ரயில்வேயின் ஒரு முன்னாள் அமைச்சராக உங்களிடம் இருந்து, சூழ்நிலையை ஆழ்ந்த மற்றும் புரிந்து கொள்ளுதலுடன் பகுத்தறியும் திறன் இருக்கும் என ஒருவர் எதிர்பார்க்க கூடும். 2004 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நீங்கள் ரயில்வே அமைச்சராக இருந்துள்ளீர்கள். ஆனால், எங்களை தொடர்பு கொண்ட உங்களது சமீபத்திய கடிதத்தில் அனைத்து கேள்விகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த பயங்கர விபத்துக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமையாகும். அதேபோல், நீங்கள் குறிப்பிட்டது போன்று மைசூரில் எந்தவித மோதலும் இல்லை. நீங்கள் பொய்யான செய்திகளை உண்மைகள் போன்று தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (21)
முதல் குடும்பத்தின் வாரிசு அவர்களின் காற்று பட்டிருக்கும், அதுதான் இவரும் இந்த மாதிரி கடிதம் ஏழுத ஆரம்பித்து விட்டார். இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் ஒன்றுமே சொல்லாமல் இருந்தால், இவரை கட்சி மதிக்குமா? அதற்காக எதோ ஏழுத வேண்டும் என்று ஏழுதி விட்டார்.
அல்லக்கைகள் ஏன் இப்படி துடிக்கின்றன. பிரதமர் கூற வேண்டிய பதிலை அல்லைக்கைக்கள் கூறுவது சரியா
கார் கே முகத்தில் மோடியின் மீது உள்ள தனிப்பட்ட வன்மம் வெறுப்பு பொறாமை ஆத்திரம்எல்லாம் தெரிகிறது
இத்தாலி மாபியாக்கள் காலை வருடி வாழும்
காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்றைக்கு உண்மையை பேசி இருக்கிறார்கள் ??? அவர்கள் பேசுவது எல்லாமே பொய் தான் !!!!