Load Image
Advertisement

வாக்காளர் அட்டை வினியோகம் இ - சேவை மையங்களில் நிறுத்தம்

சென்னை-''இ - சேவை மையங்களில், வாக்காளர் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது; நேரடியாக வீடுகளுக்கே வினியோகம் செய்யப்படுகிறது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
Latest Tamil News

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:

முன்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வந்தது. தற்போது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ஆண்டு முழுதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம்.

பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 17 வயதுக்கு மேற்பட்டோர், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, விரைவு தபாலில் வீட்டிற்கு அனுப்பப்படும்.

இதுவரை அரசு இ - சேவை மையங்களில், வாக்காளர் அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டது; தற்போது அப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டையில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் ஒரே மாதிரியான அட்டை அச்சிடப்படுகிறது.
Latest Tamil News
எனவே, புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், தேர்தல் கமிஷன் நியமித்துள்ள நிறுவனம் சார்பில், வாக்காளர் அட்டை அச்சிடப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் தபாலில் வாக்காளர்கள் வீடுகளுக்கு அனுப்புவர்.

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழியாக வினியோகிப்பதும், பல்வேறு புகார்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அட்டையை தொலைத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (5)

  • Sundar -

    கலர் voter id card வாங்க எப்படி விண்ணப்பிக்கலாம்? எனக்கு Voter id நம்பர் மட்டும் உள்ளது.

  • Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா

    வீட்டுக்கு வந்தா காசு கேப்பாங்களோ

  • A P - chennai,இந்தியா

    எனக்கு வாக்காளர் அட்டை விண்ணாப்பித்து15 வருடங்களாக அட்டை வழங்காமல், EPIC என்கிற நம்பரை மட்டும் அளித்து ஓட்டளிக்க அனுமதித்து உள்ளார்கள். RTI மூலம் விண்ணப்பித்தும் அடையாள அட்டை இன்னும் கிடைக்கவில்லை.

  • Godyes - Chennai,இந்தியா

    குடும்ப தரத்தை அவரவர் தகுதி அடிப்படையில் லோயர் மிடில் அப்பர் பிடில் என மூன்றாக பிரித்து வாக்காளர் அடையாள அட்டை வழங்கினால் எந்த பிரிவினரின் வாக்குகள் தேர்தல்களில் அதிகமாக விழுகிறது என்பதை அறியலாம்.

  • Godyes - Chennai,இந்தியா

    வாக்காளர் அட்டைகளை லோயர் மிடில் அப்பர் பிடில் என மூன்றாக பிரித்து வழ்ங்கினால் கட்சி ஆட்சி அமைப்பில் வாக்காளர் ஆதரவு அடையாளம் தெரியும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்