Load Image
Advertisement

அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடுகள் : அமித்ஷா ஆலோசனை

 Amarnath Yatra Preparations : Amit Shah advises   அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடுகள் : அமித்ஷா ஆலோசனை
ADVERTISEMENT
புதுடில்லி: காஷ்மீரில் புனித அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , உயர்மட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்..

ஜம்மு-காஷ்மீரில் பிரசித்தி அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 1-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31-ம் தேதிவரை 62 நாட்கள் நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்தது.
Latest Tamil News


இதில் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலர் அஜெய் பெல்லா, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ்படை போலீஸ் இயக்குனர் ஜெனரல் உள்ளிட்ட உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • sukumar R -

    மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கையிலை யாத்திரை நடைபெறாத காரணத்தால், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் அதன் உயர்மட்ட வயது வரம்பை 70 ல இருந்து 72 ககு மாற்றினால், கொரானாவால் போக முடியாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்