ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல் பஹாநகரில் உள்ள அரசுப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. மீட்பு பணிகள் முடிந்த நிலையில், உடல்கள் அங்கிருந்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளி தூய்மைபடுத்தி திறக்கப்பட்டது. ஆனால், அங்கு சடலம் வைக்கப்பட்டு இருந்ததால், மாணவர்கள் வர பயந்தனர். பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர்.
இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் பிரமிளா ஸ்வைன் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது. அங்கு, சடங்குகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். மூத்த மாணவர்கள் மற்றும் என்சிசி அமைப்பில் இடம்பெற்றவர்கள் மீட்பு பணிக்கு உதவினர் என்றார்.
பாலசோர் மாவட்ட கலெக்டர் தத்தாத்ரேயா கூறியதாவது: பள்ளி தலைமையாசிரியர், ஊழியர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகக்குழுவினரை சந்தித்து பேசினேன். பள்ளியை இடித்துவிட்டு புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பயம் நீங்கும் என தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (6)
பீகாரில் வில்லன் நடிகர் சோனு சூட் தன சொந்த செலவில் பெரியா பள்ளி கட்டிடம் கட்டி கொடுக்க முனைந்துள்ளார். மனிதன் மாமனிதன். தமிழகத்திலும் இருக்குதே சந்தடி சாக்கில் கிடைப்பதை உருட்டும் கும்பல். இந்த விசால புத்தி கோடி கணக்கில் மக்கள் பணத்தைய கொள்ளை பாட்டிக்கும் அரசியல் செய்யும் / சினிமாவில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு வருமா?
சடலங்கள் ரயில் தண்டவாளத்தில் கூட கிடந்தன. அப்போ அந்த தண்டவாளத்தில் செல்லும் ரயில்களில் இனி பயணம் செய்ய மாட்டார்களா? பிறகு சடலங்கள் வைக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குப் போக மாட்டார்களா? சடங்கு நடத்தி ஆவியில்லா பரிசுத்த கட்டிடம் ஆக்குவது ஸ்வைன் அந்த கிறித்தவ தலைமையாசிரியையின்😐 வேண்டுகோளா? வரிப்பணத்தை இப்படியெல்லாம் வீணடிக்கலாமா?
பழைய கட்டிடம் இடிந்து மாணவர்கள் பாதிக்கப்படுமுன் இதை சாக்கிட்டாவது பள்ளியைப் புதுப்பிக்க எண்ணுகிறார்கள் நல்லது
அங்கேயே சிறப்பு அதே போல் கட்டாதீர்கள் இடம் பெரிதாக இருந்தால் வேறு இடத்தில காட்டுங்கள்
திராவிடிய முட்டுகள் எல்லாம் இங்க வந்து கருத்தை பதிவு செய்து அறிவற்றாலயத்தில் ₹200 பெற்றுக்கொள்ளவும்..