Load Image
Advertisement

மற்ற கட்சிகளை விட வித்தியாசமானது பா.ஜ.,: ஜே.பி.நட்டா பேச்சு

BJP is different from other parties: JP Natta  மற்ற கட்சிகளை விட வித்தியாசமானது பா.ஜ.,: ஜே.பி.நட்டா பேச்சு
ADVERTISEMENT
புதுடில்லி: 'மற்ற கட்சிகளை விட பா.ஜ., வித்தியாசமானது என்றும், மற்ற கட்சிகள் ஆட்சிக்கு பின் தங்களது சித்தாந்தங்களில் இருந்து விலகி இருப்பதாகவும், பா.ஜ., மட்டும் தங்களது சித்தாந்தத்தில் உறுதியாக நிற்பதாகவும்' பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.

டில்லியில் பா.ஜ., கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: பிரதமர் மோடி, அரசை மட்டுமல்ல, அரசியல் கலாசாரத்தையும் மாற்றியுள்ளார். எளிய பின்னணியில் இருப்பவர்களும் பிரதமராகவும், கட்சித் தலைவராகவும், மாநிலத் தலைவராகவும், முதல்வராகவும் ஆக முடியும் என்ற கலாசாரத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.
Latest Tamil News

மற்ற கட்சிகளை விட பா.ஜ., வித்தியாசமானது. மற்ற எல்லா கட்சிகளையும் பாருங்கள்; அவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு தங்கள் சித்தாந்தங்களில் இருந்து விலகி இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசுடன் கைகோர்த்து பா.ஜ.,வை எதிர்க்கிறது. ஆனால் எங்கள் கட்சி சித்தாந்தத்தில் வலுவாக நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (13)

  • Sudarsan R -

    Not different in alliance with Deve Giwda

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    ஆன்மீகமும் அமலாக்கத்துறையும் போதும் என்ற தலமை வாட்ஸ்அப்பையும் வதந்தியையும் நம்ம மாநில நிர்வாகிகள் வித்தியாசமான கட்சி தான்

  • முருகன் -

    ஏழைகள் ஏழையாகவே இருக்க செய்வதில்

  • Tamilarasu Kandasamy - Mettupalayam,இந்தியா

    அந்த நம்பிக்கையில்தான் நாங்க இருக்கோம் சார், ஆனால் நீங்க அப்படியில்லை.

  • அப்புசாமி -

    ஆறு வித்தியாசங்களில்.ஒண்ணு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்