10ம் வகுப்பு தேர்வில், 35 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவரை, அவரது பெற்றோர்கள் கொண்டாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த தானேவை சேர்ந்த மாணவர், சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மொத்தம் 44.7 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெறுவேன் என எதிர்ப்பார்க்கவில்லை என மாணவர் கூறியுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது பெருமையளிப்பதாக அவரது பெற்றோர்கள், மொபைல் போனில் 35 என்ற எண்ணை காட்டி, மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.
இதனை ஐ..ஏ.எஸ் அதிகாரி அவனீஷ் சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் 'மும்பையைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.ஆனால் சோகமாகவோ கோபமாகவோ இல்லாமல் அவனது வெற்றியை பெற்றோர் கொண்டாடினார்கள்.' என பகிர்ந்திருந்தார். சுமார் 3.26 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வீடியோ வைரலானது.

பொதுவாக தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தோரை தூக்கி கொண்டாடும் பெற்றோர்கள் மத்தியில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த மாணவரை நேர்மறையான மனநிலையுடன் கொண்டாடும் பெற்றோரை ஏராளமானோர் வாழ்த்தினர்.
மற்றொரு நெட்டிசனோ,'இது பற்றி சமூகவலைதளத்தில் பேசுவது நன்றாக இருக்கும்.
ஆனால் உண்மை என்னவென்று உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும்.
மதிப்பெண் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்காது. என்கிறவர்கள். முதலில்
பார்ப்பது மதிப்பெண்ணை தான். அந்த பையனுக்கு இப்போதைக்கு இது தெரிய
வாய்ப்பில்லை. 6 - 7 ஆண்டுகளுக்கு பிறகு இது சரியா, தவறா என தெரியும்'
என பதிவிட்டிருந்தார்.
வாசகர் கருத்து (12)
தமிழ்நாடு கல்வியில் எப்படி பாஸ் ஆனாலும் பிரயோஜனம் இல்லை.. ஆக உங்கள் சொந்த புத்தியால் வியாபாரம் செய்யுங்கள். நேர்மையாக செய்யுங்கள். வாழ்வில் மகத்தான இடம் உண்டு.. இது தமிழகத்தில் வாழும் இளைஞர்கள் மீது உள்ள பற்றால் இந்த பதிவு.
நான் ஆறாம் வகுப்புவரை ஆவரேஜ் மாணவியாகத்தான் இருந்தேன் கணக்கு என்றால் ஒரே அழுகை எட்டாம் வகுப்பில் ஆசிரிய மிஸ். சவரிமுத்து அவர்களின் போதிக்கும் திறமையும், ஊக்கமான பேச்சுகளும் மிக உற்சாகப்படுத்தும் இறுதியில் பள்ளியில் இரண்டாவது மாணவி கணக்கில் தொண்ணூற்றிரண்டு மதிப்பெண் எனவே அந்தப் பையன் மனம் தவறாமல் ஊக்குவிக்கும் பெற்ரோரைப் பாராட்டுவோம்
இந்த 35. மதிப்பெண் எடுக்கவே நான் இரண்டாண்டுகள் எடுத்துக்கொண்டேன். இன்று ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் மேலாளராக இருபது ஆண்டுகல் நிறைவு செய்துள்ளேன் இன்றும் எனக்கு ஏராளமாக ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது. இன்று அந்த அலுவலகத்தை சொந்தமாக எடுத்து நடத்துகிறேன்.
இதேபோல் கடைசிவரை 35% மார்க் கெடுத்து Bank வேலையில் சேர்ந்து இறுதியில் Branch Manager ராக ரிடையர் ஆனவரை பார்த்ததுண்டு..
மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிக்காது. ஆனால் இது போன்ற கொண்டாட்டங்களுக்காக, சில நல்ல மாணவர்கள் வேண்டுமென்றே முப்பைத்தந்து மதிப்பெண்கள் எடுக்க முற்படுவார்கள். அதனால் இதுபோன்றே செயல்கள் மற்றவர்களை ஊக்குவிக்கும். குழந்தைகளுக்கு முன், மதுவை கொண்டாடுவது, குறைவான மதிப்பெண்ன்னை கொண்டாடுவது, சிகரெட்டை ஸ்டைல் என்று போற்றுவது போன்ற செயல்கள் மற்றவர்களை தவறான போக்கிற்கு ஊக்குவிக்கும்.