Load Image
Advertisement

பள்ளி கட்டடங்களை இடித்தும் புதிய பணிகளில் இழுபறி

 Dragging in new works of demolishing school buildings    பள்ளி கட்டடங்களை இடித்தும் புதிய பணிகளில் இழுபறி
ADVERTISEMENT
மாவட்டத்தில் 954 தொடக்கப் பள்ளி,தலா 200 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள சேதமுற்ற கட்டடங்களை இடிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி விபத்து நிகழ்வதற்கு முன்பே அனைத்து கட்டடங்களும் இடிக்கப்பட்டன. பள்ளி இறுதி தேர்வு நேரத்தில் கட்டடங்கள் இடிக்கப்பட்டதால் மாணவர்கள் வாடகை கட்டடங்கள், பொது பயன்பாட்டு கட்டடங்களில் கல்வி கற்றனர். தேர்வுகளையும் அவ்வாறே எழுதினர். சில பள்ளிகளில் மரத்தடியில் அமர்ந்து தேர்வு எழுதினர்.

புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் ஆறு மாதங்களாக துவங்காமல், தற்போது 15 வது நிதி குழு மானிய நிதியில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவசர கோலத்தில் நிதி ஒதுக்கி கட்டடங்கள் கட்ட உத்தரவு பெற்றுள்ளதால் பணிகள் தரமாக இருக்குமா என்பது ஐயமாக உள்ளது.

மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கட்டடங்கள் பாதி அளவு தான் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடிய இரண்டு மாதங்கள் ஆகும். புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்பு நாள் 6 முதல் 12க்கு ஜூன் 12 1முதல் 5 வரை ஜூன் 14 என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை நெருக்குவதால் தரமின்றி அமைந்து விடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • Sampath - Chennai,இந்தியா

    Still commission not yet settled.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement