Load Image
Advertisement

மீண்டும் கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயில்?

 Kanyakumari - Mumbai special train again   மீண்டும் கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயில்?
ADVERTISEMENT
சென்னை: கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி ரயில் பயணியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரியில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எர்ணாகுளம் மங்களூரு கோவா வழியாக மும்பைக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முடிய இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரயில் கன்னியாகுமரி கேரளா பயணியர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது; ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது. தற்போது இந்த ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டு விட்டது.

கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட ஜெயந்தி ஜனதா விரைவு ரயில் தற்போது புனே உடன் நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் குழித்துறை; கேரளாவில் உள்ள பாறசாலை நெய்யாற்றின்கரை ஆகிய ரயில் நிலைய பயணியர் மும்பைக்கு தற்போது நேரடி ரயில் சேவை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.எனவே பயணியர் நலன் கருதி கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • A S VElMURUGAN - TIRUNELVELI ,இந்தியா

    Nanguneri railway station அனைத்து இரயில்கள் நின்று செல்லவேணடும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement