ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சமீபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், 288 பேர் பலியாகினர். 'இன்டர்லாக்கிங் சிஸ்டம்' என்ற அமைப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த குளறுபடியில் ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்கள் இயக்கம் சீராக இருக்க வேண்டும். இந்த பணியில் ஈடுபடுவோர், எந்தவித குழப்பமும், மன அழுத்தமும் இன்றி செயல்பட வேண்டும். இதற்காக, 'ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் கட்டுப்பாட்டாளர், பாயின்ட்ஸ் மேன்' போன்றோருக்கு, அவ்வப்போது மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
ஏற்னவே சில மண்டலங்களில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. அனைத்து மண்டலங்களிலும் இதை செயல்படுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (5)
ரயில்வேயின் மிக முக்கியமான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட ஆர்ஆர்எஸ்கே நிதியை வைத்து கால் மசாஜ் செய்யும் கருவி வாங்கியிருக்கிறார்கள் என்று சிஎஜி அறிக்கை கூறுகிறது. இதுபோல் நாற்பத்தெட்டு கோடி ருபாய் பாதுகாப்புக்கு தொடர்பில்லாதவற்றுக்கு செலவு செய்திருக்கிறார்கள். பயணிகளை பாதுகாக்கும் லட்சணம் இது.
பணியாளர்களுக்கு ரயில்வே துரையின் ஆட்குறைப்பு சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் அலவன்ஸ் மற்றும் நீண்ட நேர கட்டாய பணிநேரம் இவைகள் இல்லாமல் இருந்தாலே எந்த வித அழுத்தமும் இல்லாமல் பணிபுரிவார்கள்.
'இன்டர்லாக்கிங் சிஸ்டம்' என்ற அமைப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. - தப்லீக்குகளால் தான் கோவிட் பரவியதுன்னு பார்லிமென்டில் சொன்னது போல இன்னொண்ணை சொல்லி முடிக்க வேண்டியது தானே?
Stop relying on manual tems. If you do at least learn from what the British left you with 60 yrs back - have a backup safety plan for negligence.
டிரைவர் மற்றும் கார்ட் க்கும் கொடுக்கலாமே .