Load Image
Advertisement

கழிவுநீர் குளமாக மாறிய மதுரை கூடலழகர் கோயில் குளம்

Madurai Kudalazhakar temple pond turned sewage pond    கழிவுநீர் குளமாக மாறிய மதுரை கூடலழகர் கோயில் குளம்
ADVERTISEMENT
இக்குளம் நகரின் மையப்பகுதியில் ஒரு ஏக்கரில் அமைந்துள்ளது. முன்பு தெப்ப உற்ஸவத்திற்காக கோச்சடையில் இருந்து கால்வாய் வழியாக நீர் நிரப்பப்பட்டது. சுவாமியும் குளத்தில் உள்ள மைய மண்டபத்தை சுற்றி வந்தார். காலப்போக்கில் ஆக்கிரமிப்பால்நீர் வரத்து பாதித்து குளமும், மைய மண்டபமும் பராமரிப்பின்றி போனதால் பெயரளவில்தான் உற்ஸவம் நடக்கிறது.

கோயில் நிர்வாகமும் குளத்தை சுற்றி கடைகள்கட்டி வாடகைக்கு விட்டது. கடைகள் உட்பட சுற்றியுள்ள ஓட்டல்கள், வணிக கட்டடங்களின் கழிவுநீர் குளத்திற்குள் நேரடியாக விடப்படுகிறது. நீதிமன்ற வழக்கிற்கு பின் சில ஆண்டுகளுக்கு முன் சுற்றியுள்ள கடைகள் சில அகற்றப்பட்டன. ஆனாலும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஆன்மிக மணம் பரப்ப வேண்டிய குளத்தின் மைய மண்டபம் சிதிலமடைந்துள்ளது. குளம் முழுவதும் பாசி படர்ந்த கழிவுநீர் தேங்கியுள்ளது. முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. மைய மண்டபம் குடிமகன்கள் பாராக மாறி விட்டது.

எனவே குளத்திற்குள்கழிவுநீர் வரும் பாதைகளை மாநகராட்சி அடைக்க வேண்டும். கழிவுநீர் விடுவோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து இக்குளத்தை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் குளம் போல் புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும்.

பக்தர்கள் கூறியதாவது:

1960க்கு பின் குளம் பொலிவிழந்து விட்டது.சுற்றியுள்ள கடைகளுக்கு மாநகராட்சி மாற்று இடம் ஒதுக்க வேண்டும். குளத்தை முழுவதுமாக சுத்தம் செய்து, சுற்றுச்சுவர் எழுப்பி, கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். யானைக்கல் வைகை தடுப்பணையில் ஓரளவு நீர் நிரம்பி நிற்கிறது. அங்கிருந்து இந்தகுளத்திற்கு நீர் கொண்டுவரலாம், என்றனர்.


வாசகர் கருத்து (2)

  • குமரி குருவி -

    ஆட்சி மாறும் போது காட்சிகள்மாறும்

  • kumaresan - madurai ,இந்தியா

    கோவில் குளம் மதுரை மக்களின் மனம் கவரும் வண்ணம், ஆன்மீக வளர்ச்சிக்கு பொலிவு சேர்க்கும் படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement