Load Image
Advertisement

தட்டு, டம்ளர் வாங்க ஸ்பான்சர் தேடல்; காலை உணவு திட்டத்திற்கு சோதனை

 Search for sponsor to buy plate, tumbler; Check out the breakfast plan    தட்டு, டம்ளர் வாங்க ஸ்பான்சர் தேடல்; காலை உணவு திட்டத்திற்கு சோதனை
ADVERTISEMENT
அரசு துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தேவையான தட்டு, டம்ளர் வாங்க நிதி ஒதுக்கப்படாததால், ஊராட்சி நிர்வாகத்தினர், நன்கொடையாளர்களை தலைமை ஆசிரியர்கள் நாடி வருகின்றனர்.

தமிழகத்தில், அரசுதுவக்க பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு செப்.,15ல் துவக்கி வைத்தார்.

நடப்பு கல்வியாண்டில், தமிழகம் முழுதும், 1500க்கும் மேற்பட்ட துவக்க பள்ளிகளில், 1.14 லட்சம் மாணவ - மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

'மகளிர் திட்டம் சார்பில், மகளிர் குழுக்கள் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், மாணவர்களுக்கு தேவையான தட்டு, டம்ளர் வாங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், சிக்கல் எழுந்துள்ளது.

ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 'காலை சிற்றுண்டி வழங்க மாணவ, மாணவியருக்கு தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட பாத்திரங்களை, அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் நன்கொடையாளர் கள் வாயிலாக பெற்றுக் கொள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்' என்றனர்.

இதனால், தேவையான தட்டு, டம்ளர் வாங்க, பாத்திரக் கடைகளில்விலைப்பட்டியல் வாங்கி,ஊராட்சி தலைவர், நன்கொடையாளர்களின் உதவியை தலைமை ஆசிரியர்கள் நாடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் செயலர் அசோக்குமார் கூறுகையில், ''தட்டு, டம்ளர் உள்ளிட்ட பாத்திரங்களை வாங்கித்தர தலைமையாசிரியர்கள் கேட்கின்றனர். பெரும்பாலான ஊராட்சிகளில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில், இச்செலவினத்தை ஏற்பது சிரமம் தான்.

''நாங்களும், எங்கள் பகுதி நிறுவனங்கள், தன்னார்வலர்களிடம் நன்கொடை பெற வேண்டிய சூழல் உள்ளது. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், இதுபோன்ற செலவினங்களை ஈடுகட்டவும் அரசே நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என்றார்.


வாசகர் கருத்து (9)

  • Neutrallite - Singapore,சிங்கப்பூர்

    ஆனா அதுக்குள்ள இத்தனை கோடி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டின்னு விளம்பரம் மட்டும் போட்டாச்சு...ஆசிரியர்களை பிச்சை எடுக்க சொல்லியாச்சு...பாவம் மாணவர்கள்.

  • குமரி குருவி -

    தட்டு கம்பு வாங்க ஒதுக்கியபணம் என்னாச்சு..

  • Edwin Xavier - Neyveli,இந்தியா

    This Government is utter failure.

  • Arul Narayanan - Hyderabad,இந்தியா

    தலைமை ஆசிரியர்களுக்கு இது தான் வேலை.

  • raja - Cotonou,பெனின்

    இதுக்கு முந்திய செய்தி... அனைத்து துறைகளிலும் தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கிறது முதல்வர் ஸ்டாலின் பெருமித படும்போது இதை சொல்ல வெக்கமாய் இருக்க வில்லையா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement