Load Image
Advertisement

தமிழ் எண் மைல்கல் கண்டெடுப்பு

Tamil Number Milestone Finder    தமிழ் எண் மைல்கல் கண்டெடுப்பு
ADVERTISEMENT
விருதுநகர்:விருதுநகரில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட, 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், செந்திவிநாயகபுரத்தில் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில், தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல், முத்து முனியசாமியாக வழிபாட்டில் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, சிவக்குமார் கண்டறிந்தனர்.

அவர்கள் கூறியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சி துவக்கத்தில் மைல் கல்களில் ஊர் பெயர்களை ஆங்கிலம், தமிழ், ரோமன், தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய மைல்கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார்.

விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் விருதுபட்டி என ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.

இங்கிருந்து விருதநகர் ரயில்வே ஸ்டேஷன் வரை உள்ள துாரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், 'க' என்ற தமிழ் எண்ணிலும் குறித்துள்ளனர். ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

கல்லில் கருப்பு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளதால் இதன் எழுத்துக்கள் தெளிவாக இல்லை. இக்கல் வழிபாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் 1923க்கு முன் வரை விருதுநகரானது,

விருதுபட்டி என அழைக்கப்பட்டது. மதுரையில் இருந்து தெற்கே ரயில் பாதை அமைத்த போது, 1876ல் விருதுபட்டியில் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. இதனால் இவ்வூர் முக்கிய வர்த்தக நகரானது.

இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் துாத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இது உதவியது. இப்போதும் கூட விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் சுருக்க குறியீடு விருதுபட்டியை குறிக்கும்'விபிடி' தான்.

அருப்புக்கோட்டையில் இருந்து சரளைக்கல் ரோடு போடப்பட்ட போது, இம்மைல்கல் வைக்கப்பட்டிருக்கலாம்.

இம்மைல்கல்லின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.,1875க்கு முன் நடப்பட்டதாக கருதலாம், என்றார்.


வாசகர் கருத்து (1)

  • குமரி குருவி -

    தமிழ் மூத்த மொழி சரிங்கதமிழகத்தில் தமிழை வளர்க்கசங்கம் வைக்க வேண்டிய நிலைஉருவாகி வருகிறது..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement