புதுடில்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீதம் அளவிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நபர் ஒருவர் வங்கிகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் மட்டுமே ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியும். அதேநேரத்தில் டெபாசிட் செய்ய எந்த லிமிட்டும் இல்லை.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. பணத்தை திரும்பப்பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப வந்துள்ளன.
அதாவது புழக்கத்தில் இருந்த 50 சதவீத நோட்டுகள் திரும்பியுள்ளன. அதில், 85 சதவீதம் வங்கி டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளன. மற்றவை வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (23)
அடிப்பாங்களாம்.. அப்புறம் செல்லாது என பிடுங்குவாங்கலாம்.. மொத்தத்தில் இது மக்கள் பணம் செலவாகிறது
பாதியளவு 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டன...//// அட பாவமே ... பாதியாக கிழித்து கொடுத்து விட்டார்களா..? (என்று தான் தலைப்பு செய்தியை படித்தவுடன் தெரிந்தது..)
நேர்மையான வணிக எண்ணம் உள்ள யாரும் இத்தனைக் காலம் வெறுமனே 2000 ரூ தாள்களாக பெட்டியில் வைத்திருக்க🙄 வாய்பில்லை. கறுப்புப்பண முதலைகளால். மட்டுமே அது இயலும். ஏனெனில் அரசு வங்கிகளில் வணிகக் கடன் 10 முதல் 14, வெளி மார்க்கெட்டில் ஆண்டுக்கு 24 முதல் 36 சதவீதம் வரை வட்டி. ஆக எப்படி மாற்றுவது எவ்வளவு செலவாகும் என கலங்கும் கும்பல் மீதி 2000 த்தில் பெரும் பகுதியை வைத்துள்ளது. தொடர் ரெய்டுகளில் நிச்சயம் மாட்டுவாவர்கள்.
கவலையே படாதீங்க மீதமுள்ள பணத்திற்கும் அதிகமாகவே வந்து சேர்ந்துவிடும். அரசு தரவுகள் என்னிக்கு சரியா இருந்துச்சு கணக்கு முடிக்க. அறிவித்ததை போலெ இருமடங்கு பணம் வங்கிகளுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.
மீதி பாதி கோல்மால் புறத்திலும், கான் கிராஸிலும் இருக்கும்.