Load Image
Advertisement

கொடை ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற பயோ பிளாக்:இந்தியாவிலேயே முதன்முறையாக துவக்கம்

Bio block to convert Kodai lake into fresh water lake: Indias first launch    கொடை ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற பயோ பிளாக்:இந்தியாவிலேயே முதன்முறையாக துவக்கம்
ADVERTISEMENT
கொடைக்கானல்:கொடைக்கானல் ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற இந்நகராட்சி 'பயோ பிளாக் ' திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் துவக்கப்படுகிறது.

கொடைக்கானல் ஏரியை 1863-ல் சர் லெவின்ச் கட்டமைத்தார். அப்போது குடிநீர் பயன்பாட்டுடன் நன்னீர் ஏரியாக இருந்தது. தற்போது நீர் தாவரங்கள் ,கரையோரங்களில் அடர்ந்துள்ள புதர்கள் என ஏரியின் அழகு பாதிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சியானது ஏரியை மேம்படுத்தும் வகையில் ரூ. 24 கோடியில் நடைபாதை, வேலி, நீரூற்றுகள், புதிய படகு குழாம் உள்ளிட்ட நவீன வசதிகளை கட்டமைத்து வருகிறது. ரூ. 3 கோடியில் பயோ பிளாக் எனும் ஜப்பான் தொழில்நுட்பத்தை புகுத்தி ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் 50 ஆயிரம் லிட்டர் தற்காலிக தொட்டி அமைத்து ஏரி நீரை சேமித்து அதில் பயோ பிளாக் எனும் பவளப் பாறைகளை இட்டு ஒன்றரை மாதங்களாக ஆய்வுக்குட்படுத்தி உள்ளது. இதில் மாசடைந்த ஏரி நீர் தெளிவடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஏரியை சுற்றி 41 இடங்களில் மிதவை முறையில் 'பயோ பிளாக்' பவள கற்கள் மிதக்க விடப்பட உள்ளன. இதன் திட்ட மதிப்பு ரூ.3 கோடி. இதன் மூலம் ஏரியில் உள்ள 7 லட்சம் கியூபிக் லிட்டர் நீர் துாய்மைப்படுத்தப்பட உள்ளது. 'பயோ பிளாக்' கற்கள் அமைப்பதன் மூலம் ஏரி நீர் துாய்மை அடைந்து தேவையற்ற நீர் தாவரங்களையும் இயற்கை முறையில் அகற்றப்பட உள்ளது. இதன் பின் கொடைக்கானல் ஏரி துவக்கத்தில் இருந்தது போன்று நன்னீர் ஏரியாக காட்சியளிக்கும் என அதிகாரிகள் கூறினர்.

நகராட்சி அதிகாரி கூறுகையில்,'கொடைக்கானல் ஏரியை சுற்றி தண்ணீர் விழும் 41 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மிதவை முறையில் பயோ பிளாக் பவளப்பாறை கற்கள் தாவரங்களுடன் மிதக்க விடப்படும். இவை நீரில் உள்ள தேவையற்ற நச்சுக்கள், மாசுபொருட்களை இயற்கை முறையில் துாய்மைப்படும். மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள் சிறப்பாக வளர இது உதவி புரியும். ஏரியில் 16 ஆயிரம் கற்கள் மிதக்க விடப்படுகிறது.

இவை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.

இந்தியாவிலேயே கொடைக்கானல் ஏரியில் தான் தற்போது இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் கொடைக்கானல் ஏரி நன்னீர் ஏரியாக காட்சியளிக்கும் ,'' என்றார்.


வாசகர் கருத்து (1)

  • srinivasan - stockholm,சுவீடன்

    Kodai oru kutti japan

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement