Load Image
Advertisement

சாலையை மூடியது மணல் சுற்றுலா பயணிகள் அவதி

Tourists suffer due to sand blocking the road    சாலையை மூடியது மணல் சுற்றுலா பயணிகள் அவதி
ADVERTISEMENT
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மணல் மூடியதால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சிரமத்துடன் கடந்து சென்றன.

தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கியதால் தற்போது தனுஷ்கோடி பகுதியில் சூறைக்காற்று வீசுகிறது. இதனால் தனுஷ்கோடி அரிச்சல் முனை முதல் முகுந்தராயர்சத்திரம் வரை உள்ள 10 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை கடற்கரையில் இருந்து வீசும் மணல் புயல் சாலையில் ஆங்காங்கே படிந்து குவிந்துள்ளது.

இதன்காரணமாக தனுஷ்கோடி சர்ச், அரிச்சல்முனை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மணல் குவியலில் சிக்கி சிரமத்துடன் கடந்து செல்கின்றன. சில நேரங்களில் டூவீலரில் வரும் சுற்றுலா பயணிகள் மணல் குவியலை பொருட்படுத்தாமல் சென்று நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பரவி கிடக்கும் மணல் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement