Load Image
Advertisement

ஊட்டி மலை ரயிலில் கவர்னர் ரவி பயணம்

Governor RN Ravis journey by Ooty hill train!   ஊட்டி மலை ரயிலில் கவர்னர் ரவி பயணம்
ADVERTISEMENT
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் நடந்து வரும், துணைவேந்தர்கள் மாநாட்டை துவக்கி வைக்க கடந்த, 3ம் தேதி இரவு கவர்னர் ரவி, ஊட்டி வந்தார். 5 ம் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். பின், உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி மனைவி லக்ஷ்மியுடன் ராஜ்பவன் வளாகத்தில் இரண்டு மரக்கன்று நடவு செய்தார்.

இந்நிலையில், இன்று(ஜூன் 07) கவர்னர் ரவி மனைவி லக்ஷ்மியுடன் ஊட்டி ரயில் நிலையத்திலிருந்து மலை ரயில் மூலம், குன்னூர் சென்றார். ஊட்டி - குன்னூர் இடையே கேத்தி பள்ளத்தாக்கின் இயற்கை காட்சி,படகு இல்லம் குகை உள்ளிட்டவற்றை கடந்து ரயில் சென்றதை பார்த்து பரவசமடைந்தார். ரயில் குன்னூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

குன்னூரில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் மதிய உணவு சாப்பிட கவர்னர் குன்னூரிலிருந்து கார் மூலம் ஊட்டி ராஜ்பவன் வந்தார். முன்னதாக, ஊட்டி ரயில் நிலையம் வந்த கவர்னர் ரவியை ரயில்வே உதவி இயக்குனர் சரவணன் புத்தகம் கொடுத்து வரவேற்றார். கவர்னர் மலை ரயிலில் செல்வதையொட்டி மோப்ப நாய் மூலம் ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்களை சோதனையிட்டு, பின், ரயிலில் செல்லும் சுற்றுலா பயணிகளை சோதனைக்கு பின் அனுமதித்தனர்.


வாசகர் கருத்து (3)

  • Mohan A Annamalai - Tiruvannamalai,இந்தியா

    000

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    வந்தாரை வாழவைக்கும் தமிழகம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement