Load Image
Advertisement

தீவிர புயலாக வலுப்பெற்றது பைபோர்ஜாய் புயல்

Cyclone Biparjoy to intensify into very severe storm in 24 hours; Maharashtra, Karnataka, Goa to be affected, says IMD தீவிர புயலாக வலுப்பெற்றது பைபோர்ஜாய் புயல்
ADVERTISEMENT
புதுடில்லி: அரபிக் கடலில் உருவாகியுள்ள 'பைபோர்ஜாய்' புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் (ஜூன் 5) மாலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று வலுப்பெற்று வடக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த 'பைபோர்ஜாய்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Latest Tamil News
இந்நிலையில், இன்று காலையில் பைபோர்ஜாய் புயல் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. இது கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 890 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புயலால் மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • குமரி குருவி -

    தி.மு.க.ஆட்சியில் ஊழல் புயல் தாக்கமே தீராத வேளையில் புயலா

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இங்கு தமிழகத்தில் ஆளும்கட்சி செய்யும் பித்தலாட்டங்களுக்கு மழை பெய்யுமா என்ன? பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்