Load Image
Advertisement

தேசிய தரவரிசை பட்டியலில் சறுக்கிய மதுரை காமராஜ் பல்கலை

Madurai Kamaraj University slipped in the national ranking list   தேசிய தரவரிசை பட்டியலில் சறுக்கிய மதுரை காமராஜ் பல்கலை
ADVERTISEMENT
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தேசிய தரவரிசை பட்டியலில் (என்.ஐ.ஆர்.எப்.,) 52ல் இருந்து 53 வது இடத்திற்கும், அனைத்து கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 88ல் இருந்து 94 வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட இப்பட்டியலில் அண்ணா பல்கலை 14, பாரதியார் 21, அழகப்பா 30, பாரதிதாசன் 41 வது இடங்களை பெற்றுள்ளன. பழமை வாய்ந்த காமராஜ் பல்கலை சறுக்கியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: உயர்கல்வி நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையில் ஐந்து பிரிவுகளில் பல்கலை, கல்லுாரிகளின் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கற்றல் கற்பித்தல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைகள், பட்டம் பெற்றவர்கள் (வெளி மாநிலம், நாடுகள்) எண்ணிக்கை, பல்கலை ஆய்வுகளால் சமூக வளர்ச்சி, பல்கலை மீதான சக மாணவர், ஆசிரியர், வல்லுனர் பார்வை போன்ற பிரிவுகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இப்பிரிவுகளில் தலா 100க்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணில் கற்றல் கற்பித்தலுக்கு 63.47, பட்டம் பெற்றவர்கள் பிரிவில் 68.37, பல்கலை ஆய்வுகளால் சமூக வளர்ச்சி பிரிவில் 51.80 மதிப்பெண்களும் கிடைத்தன. அதே நேரம் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பிரிவில் 24.45, சக மாணவர் ஆசிரியர், வல்லுனர் பார்வை பிரிவில் 10.45 மதிப்பெண்கள் தான் கிடைத்தது. இரண்டு பிரிவுகளில் மதிப்பெண் குறைந்ததால் முந்தைய இடத்தை இப்பல்கலை தக்கவைக்க முடியவில்லை.
Latest Tamil News
குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக கற்பித்தல் குறைவு, விடுதிகளில் வசதியின்மை, மேற்படிப்புக்கு செல்வதில் குறைவு, புள்ளிவிபர பராமரிப்பில் தொய்வு, 2014 முதல் முன்னாள் மாணவர்கள் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்கம் போன்றவை காரணமாக அமைந்துவிட்டன. குறிப்பாக ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடுத்த ஆண்டிலாவது விட்ட இடத்தை பிடிக்க தற்போதைய துணைவேந்தர் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அடுத்தாண்டு சாதிப்போம்:



துணைவேந்தர் குமார் கூறுகையில், "இந்த முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்தாண்டு தேசிய அளவில் கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் சற்று பின்தங்கியுள்ளோம். அடுத்த ஆண்டில் சரி செய்து சாதிப்போம்" என்றார்.



வாசகர் கருத்து (11)

  • பெரிய ராசு - Arakansaus,இந்தியா

    இதாவது பரவாயில்லை மனோனோன்மணீயம் சுந்தரனார் சொல்ல முடியாது ...துணை வேந்தரின் முழு நேர அலுவல் கிருத்துவ மதத்தை பரப்பாவது தான். இந்துக்களை அடித்து விரட்டுவது தான் ..தரவாரிசியாவது ஒண்ணாவது ...

  • duruvasar - indraprastham,இந்தியா

    தரசான்றெல்லாம் 'ஓசி' யில் கிடைக்காது. துறை அமைச்சருக்கு ஆளுனருடன் சண்டை போட மட்டும் தான் நேரம் இருக்கிறது

  • DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    need toilet door and toilet closet for use , all closet damaged ..no door , no water in toilet ..this much workers in MKU ..what they are doing here ..3 floor construction and maintenance office , 25 people working in this office ..what they are doing, simply taking salary and corruption money from contractors ..TN government and Governer of TN ..must take action ..please control top to bottom corruption in MKU ..

  • DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    First MKU maintenance team , rectify all toilets in MKU complex ,there is university construction and maintenance office ..but they are doing more corruption in construction and maintenance ..zero maintenance for building.. only claiming bill , in toilet no closet , no door for closet room , no water supply ..very poor maintenance .. no cleaning inside building and outside, Totally disaster in MKU compass.. top to bottom corruption only.. government giving salary for work ..100 % workers in mku they don't want to do their work ..also asking money for everything.. maintenance team corruption in bill , with out any work , claiming money for work..total MKU campass like poor country university ..need strict wise cancelier, strict engineers ..dedicate to work for MKU ..TN government can not take action , governor of TN must take action , must go surprise visit ..with out inform.. MP madurai , MLA s are what they are doing there , i dont know..

  • mohanamurugan - panruti,இந்தியா

    முதல் 10 இடங்கள் பெற்ற கல்லூரிகள் எவை கடைசி 10 இடங்கள் பெற்று கல்லூரியில் எவை எந்தெந்த மாநிலம் எந்தெந்த பிரிவில் முன்னணியில் இருக்கின்றன எந்தெந்த பல்கலைக்கழகங்கள் அல்லது மாநிலங்கள் எந்தெந்த பிரிவுகள் தங்கி இருக்கின்றன அவற்றை முன்னேற்ற வழி என்ன

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்