Load Image
Advertisement

ரூ.1.50 கோடி மானிய தொழில் கடன் கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு 



சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அதிகபட்சம் ரூ.1.50 கோடி மானியத்தில் தொழில் கடன் வழங்கப்படும் என சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜீத் பேசினார்.

சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் தொழில் முன்னோடிகள் சிறப்பு திட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், ஆதிதிராவிடர் நல அலுவலர் பாஸ்கரன், தாட்கோ மேலாளர் முத்துலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், ஐ.ஓ.பி., தேவதாஸ், மத்திய சிறு,குறு தொழில் நிறுவன மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் உமா சந்திரிகா, உதவி இயக்குனர் கலாவதி, சிட்கோ கிளை மேலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் தேவராஜ் பங்கேற்றனர்.

ரூ.1.50 கோடி மானிய கடன்



கருத்தரங்கை துவக்கி வைத்து கலெக்டர் பேசியதாவது, இத்திட்டத்தில் ஆயுத்த ஆடைகள் தயாரித்தல், ப்ளை ஆஷ் செங்கல், சிமென்ட் செங்கல், கயிறு, நார் பொருட்கள், மளிகை கடை, வணிக பொருள் விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், ரைஸ்மில், ஆயில் மில் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன்பெறும் விதத்தில் மொத்த திட்ட தொகையில் 35 சதவீதம் மானியம். மானிய உச்சவரம்பு ரூ.1.50 கோடி. கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீத வட்டி சலுகையும் உண்டு.

விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி இல்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 35 சதவீத அரசின் பங்காக மும்முனை மானியம் வழங்கப்படும். இதில் பயன்பெற திட்ட அறிக்கை, உரிய ஆவணத்துடன் www.msmeonline.tn.gov.in''- இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement