Load Image
Advertisement

தடையின்மை சான்று பெறுவதில் இழுபறி அறங்காவலர் நியமனத்தில் தாமதம்

திருப்பூர்:போலீஸ் தடையின்மை சான்று மற்றும் சொத்துரிமை சான்றிதழ் பெறுவதில் இழுபறி நிலவுவதால் கோவில் அறங்காவலர் நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடந்து வருகிறது. அதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

பரம்பரரை அறங்காவலர் முறையில்லாத கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யும் பணி துவங்கியுள்ளது.

முதன் முறையாக ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிக்கும் அனைத்து கோயில்களுக்கும் குழு நியமனம் செய்யப்படுகிறது. தனி நபராக இருந்தால் ஒரு ஆண் மூன்று அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவாக இருந்தால் ஒரு பெண் மற்றும் ஒரு எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த நபர் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

சிறிய கோவில்களுக்கு தனி நபர் அறங்காவலர் அல்லது மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது; மற்ற கோயில்களுக்கு ஐந்து பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட உள்ளது.

அறங்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெற்று சரி பார்க்கும் போது போலீசில் இருந்து குற்றம் தொடர்பில்லாத நபர் என்ற தடையின்மை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

வருவாய்த்துறையிடம் சொத்து மதிப்பு சான்றிதழ் பெற்றும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விரு சான்று பெறுவதும் சில பகுதிகளில் இழுபறியாக இருப்பதால் அறங்காவலர் நியமனம் தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாவட்ட அறங்காவலர்குழு உறுப்பினர்கள் கூறுகையில், 'அறங்காவலராகும் ஆர்வத்துடன் பலரும் விண்ணப்பித்துஉள்ளனர். போலீசில் இருந்து தடையின்மை சான்று மற்றும் வருவாய்த்துறையில் சொத்துமதிப்பு சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

'சான்று பெறுவதில் இழுபறி நீடிப்பதால் கோயில் அறங்காவலர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சான்றுகளையும் விரைந்து வழங்க ஆவண செய்ய வேண்டுமென கலெக்டர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement