Load Image
Advertisement

மக்களை ஏமாற்றும் வேலையை திமுகவிடம் கற்றுக்கொண்ட காங்.,: அண்ணாமலை விமர்சனம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுவது குறித்து, கூட்டணி கட்சியான திமுக விடம் இருந்து காங்கிரஸ் நன்கு கற்றுக்கொண்டதாக தெரிகிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Latest Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, 200 யூனிட் இலவச மின்சாரம்; குடும்ப தலைவியருக்கு மாதம் 2,000 ரூபாய்; பி.பி.எல்., ரேஷன் கார்டு குடும்பங்களில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி. வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு 1,500 ரூபாய் ஊக்கத்தொகை; மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் ஆகிய ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது.

அதன்படி, தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்ததும் இந்த ஐந்து வாக்குறுதிகளையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது குறித்த புகைப்படங்களை, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Latest Tamil News

மேலும், அண்ணாமலை கூறியிருப்பதாவது:
தேர்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுவது குறித்து, கூட்டணி கட்சியான திமுக விடம் இருந்து காங்கிரஸ் நன்கு கற்றுக்கொண்டதாக தெரிகிறது.

வெற்றி பெற்ற பிறகு மக்களை தன் வசப்படுத்திக் கொள்வது எப்படி? என்பது குறித்தும் நன்கு தெரிந்து கொண்டுள்ளது. ஏமாற்றுதல், பித்தலாட்டம், மோசடி ஆகிய 3 செயல்பாடுகளை காங்கிரஸ் மற்றும் திமுக மந்திரமாக கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து (20)

 • M.Selvam - Chennai/India,இந்தியா

  15 லட்சம் வாக்குறுதி கொடுத்து ஜெயிச்சு பின்னர் சாக்கு போக்கு சொல்லி திரிவோர்...இவர்கள் யாரிடம் கற்றுக் கொண்டார்கள் வித்தை யை ????

 • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

  பிஜேபி முத்தலாக் தடை சட்டம் மூலம் முஸ்லிம் பெண்களின் வாக்குகளையும், இலவச காஸ் இணைப்பு, கழிப்பறை, குடிநீர் விநியோகம் மூலம் அனைத்து மத பெண்களின் வாக்குகளையும் பெற முயற்சித்து, யு.பி.யில் வெற்றியும் பெற்றது. அதற்கு போட்டியாக பெண்களின் வாக்குகளை பெற எதிர்கட்சிகள் இலவசத்தை கையில் எடுத்துள்ளன. பெண்களின் ஆதரவு இல்லாவிட்டால் பிஜேபி அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகும். புதிய தேசிய நெடும் சாலைகளும், வந்தே பாரத் ரயில்களும் மகளிர் ஓட்டுக்களை கொண்டுவராது.

 • Parthasarathy Govindarajan - Tambaram,இந்தியா

  people will forget. everything

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  பாஜகவின் தலைவர், ஊழல் மற்றும் லஞ்சம் வாங்காத தேசியவாதி அண்ணாமலைக்கு ஒரு விஷயம் தெரியவில்லை. அரசியல் என்பது சமூக வலைத்தளங்களில் மட்டும் செய்ய முடியாது. கிராமங்கள் தோறும் அடித்தட்டு மக்கள் வரைக்கும் அரசியல் செய்ய தெரியவேண்டும். கட்டுமர திருட்டு திமுகவும், அதிமுகவும் பலமான கட்டமைப்பை கிராமங்கள் தோறும் கொண்டுள்ளது. அவர்கள் ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை வார்டு மெம்பர் வரைக்கும் பிரித்து கொடுப்பார்கள். பாஜகவால் அப்படி செய்ய முடியாது. கிராமங்களில் ஜாதி வாக்குகளும் மிக முக்கியம். கட்டுமர திருட்டு திமுக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த ஜாதி மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும். பெரியார் மண்ணு, திராவிட பண்ணு, நாங்கள் ஜாதியை ஒழித்துவிட்டோம் என்று கட்டுமர திருட்டு திமுக சொல்வதெல்லாம் வெறும் மாயை. இவ்வளவு தடைகளை உடைத்து பாஜகவை வளரவைப்பது அவ்வளவு சுலபமில்லை. தவிரவும், தேர்தல்கள் வந்தால் கிராமங்களில் இருப்பவர்கள் அனைவரும் வாக்களித்து விடுவார்கள். ஆனால் கட்டுமர திருட்டு திமுக போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வரவே கூடாது என்று நினைக்கும் மேல்தட்டு மக்கள் மற்றும் படித்தவர்கள் தேர்தல் அன்று ஜாலியாக டிவி பார்த்துக்கொண்டு வாக்களிக்க செல்வதில்லை. வாக்கு சதவீதம் அதிகரிக்காவிடில் பாஜக ஜெயிக்க வாய்ப்பே இல்லை. நன்றாக கவனித்து பாருங்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் கட்டுமர திருட்டு திமுக வெறும் ஐந்து சதவீத ஓட்டுக்கள் மட்டும் கூட வாங்கி ஆட்சிக்கு வந்திருக்கும். ஆனால் வாக்களிக்காமல் இருபது சதவீதம் பேர் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் கட்டுமர திருட்டு திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள். ஆனால் என்ன செய்ய முடியும்? இது தவிரவும் கட்டுமர திருட்டு திமுக போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வருவதன் ரகசியம் ஒன்றும் தேவலோக ரகசியம் இல்லை. மூர்க்க கும்பல் ஓட்டுக்கள், மதம் மாற்றும் கும்பல் ஓட்டுக்கள், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் மற்றும் அல்லக்கைகளின் குடும்ப ஓட்டுக்கள், சுயநலம் மிக அதிகம் கொண்ட அரசு ஊழியர்களின் குடும்ப ஓட்டுக்கள் இவை நான்கும் இல்லையென்றால் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியே டுமிழகத்தில் இருக்காது. தேர்தல்களில் மூர்க்க கும்பலும், மதம் மாற்றும் கும்பலும் மதம் பார்த்து வாக்களிப்பார்கள். அவர்கள் வழிபாடு தளங்களில் இவருக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று ஜெபம் செய்து அவர்கள் மத குருமார்கள் சொல்லும் ஆட்களுக்கு மட்டும் ஓட்டு போடுவார்கள் ஆனால் இளிச்சவாய இந்துக்கள் மட்டும் மத சார்பின்மை, நடுநிலை என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள். இது ஒரு கசப்பான உண்மை. யாரும் இதை பற்றி பெரிதாக பேசுவதில்லை. இனியும் டுமிழ்நாட்டு மக்கள் இதை பற்றி பேசாமல் இருந்தால் எதிர்காலத்தில் அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவின் மூன்றாம் தலைமுறை கொள்ளுப்பேரன் கூட டுமிழக முதல்வராக வந்து டுமிழகத்தை ஊழல்களாலும் லஞ்சத்தாலும் கொள்ளை அடித்து டுமிழ்நாட்டை நாசம் செய்வான். பாஜகவின் மீதும் தவறு இருக்கிறது. பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் தேர்தல்களில் ஓட்டு சதவீதத்தை உயர்த்த எந்த ஒரு ஏற்பாடும் செய்யவில்லை. நிறைய மக்கள் வேலை நிமித்தம், வேறு ஊர்களில் செட்டிலாகி தேர்தல் நாளன்று ஊருக்கு செல்ல முடியாமல், வாக்கு அளிக்க முடியாமல் தவிப்பார்கள். அதற்கு எங்கு இருந்தாலும் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை வைத்து தான் இருக்கும் ஊரிலிருந்தே வாக்கு அளிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். இப்போது டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆஸ்திரேலியா போன்று கட்டாயமாக நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரலாம் அல்லது தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு ரேஷன், காஸ் மானியம் போன்ற அரசு சலுகைகள் கிடையாது என்று சட்டம் கொண்டு வரலாம். யாராச்சும் இதை அண்ணாமலைஜிக்கும், தேசியவாத பாஜகவுக்கும் எடுத்து சொல்லுங்கப்பா. இல்லனா பெரியார் மண்ணு திராவிட பண்ணுன்னு சொல்லி உருட்டி உருட்டியே கட்டுமர திருட்டு திமுக போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்துகொண்டே இருக்கும். ஹி...ஹி...ஹி...

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  இலவசம் என்ற புற்றுநோயை முதன்முதலில் இந்தியாவிற்கு அறிமுக படுத்தியது திருட்டு திமுகவின் கட்டுமரம். அந்த புற்றுநோய் கூடிய விரைவில் இந்தியா முழுவதையும் பாதிக்க போகிறது. இந்தியாவின் எந்த ஒரு மோசமான விளைவுகளையும் எடுத்து மூல காரணத்தை ஆராய்ந்தால் அது கட்டுமர திருட்டு திமுகவிடம் சென்று முடிவடைகிறது. கட்டுமரம் மறைவிற்கு பிறகும் நின்று விளையாடுகிறது. என்னத்த சொல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்