Load Image
Advertisement

மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்

Maharashtra Cabinet Expansion   மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்
ADVERTISEMENT
மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி,, பா.ஜ., வும் கூட்டணி ஆட்சி நடக்கிறது.


இம்மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இது தொடர்பாக முதல்வர் ஏக்நாத்ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸூம், டில்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.Latest Tamil News
இந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் ஆட்சி அமைத்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்வது, வரப்போகும் தேர்தல்களில் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சரை விரிவாக்கம் தொடர்பாக முடிவு செய்யப்பட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் பேசப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்