Load Image
Advertisement

தலைசிறந்த கல்லூரிகள் பட்டியல்: முதல் 10ல் மூன்று தமிழக கல்லூரிகள்


புதுடில்லி: மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், சென்னையின் மாநில கல்லூரி தேசிய அளவில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 4வது இடமும், சென்னை லயோலா கல்லூரி 7வது இடமும் பிடித்துள்ளன.

Latest Tamil News

தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது.

சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியல்:





* டில்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம்

* டில்லி ஹிந்து காலேஜ் 2வது இடம்

* சென்னை மாநில கல்லூரி 3வது இடம்

*கோவை பி.எஸ்.ஜி பெண்கள் கல்லூரி 4வது இடம்

* சென்னை லயோலா கல்லூரி 7வது இடம்

சிறந்த பல்கலைக்கழகங்கள்





பெங்களூரு ஐ.ஐ.எஸ் முதல் இடம்

டில்லி ஜேஎன்யு 2வது இடம்

டில்லி ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் 3வது இடம்

அமிர்தா விஷ்வா வித்யாபீதம் , கோவை 7வது இடம்

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 8வது இடம்

Latest Tamil News

சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகள்





சிறந்த இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களின் வரிசையில் ஐஐடி மெட்ராஸ் 8வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. திருச்சி என்.ஐ.டி., 9வது இடத்தில் உள்ளது.

சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனங்கள்





டில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடத்தையும், சண்டிகரில் உள்ள பிக்மர் மருத்துவமனை இரண்டாம் இடத்தினையும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

சிறந்த வேளாண் கல்வி நிறுவனங்களின் பட்டியலில், டில்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்தையும், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.



வாசகர் கருத்து (22)

  • GANESAN S R - chennai,இந்தியா

    சங்கிகளுக்கு மத்தவன் உழைப்பிலேயே வாழ்வதுதானே வழக்கம்.

  • sankar - chennai,இந்தியா

    கையூட்டல் உண்டா இருக்குமோ எல்லாம் வியாபாரம்தானே

  • venugopal s -

    தமிழக சங்கிகளுக்கு வயிற்று எரிச்சல் அதிகமாகி விடுமே!

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    பட்டியலில் இடம்பெற்றுள்ள தனியா அல்லாத கல்லூரிகள் மற்றும் பலக்லைக்கழகங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. காங்கிரஸ் ஆட்சியில் இப்படிப்பட்ட்ட மேன்மையை அடைந்து அதை அப்படியே தக்கவைத்துவருகின்றன

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    நம்ம ஆள் தான் பத்து வருஷத்துக்கு மேலே ஆண்டார். அதுக்கு அப்புறம் பத்து வருஷமா பி ஜெ பி தான் குஜராத்தை ஆண்டுவருது ... அப்போ இருபது வருஷமா பி ஜெ பி தான் குஜராத்துல.. இந்த இருபது வருஷத்துல ஒரே ஒரு காலேஜை கூடவா இப்படிப்பட்ட தரத்துக்கு உயர்த்தமுடியால் ஒரு ஆட்சி நடத்தி உள்ளார்கள்?? இது தான் அக்மார்க் குஜராத் மாடல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement