நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்: சாக்ஷி மாலிக்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனையர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு வீராங்கனையரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன், 66, மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, புதுடில்லி போலீசார் தெரிவித்தனர்.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்களை அமித்ஷா சந்தித்த நிலையில், சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார் என தகவல் வெளியானது.

இது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் சாக்ஷி மாலிக் கூறியிருப்பதாவது: நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது; தவறான தகவலை பரப்ப வேண்டாம். ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன்; நீதி கிடைக்கும் வரை அகிம்சை வழியில் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (23)
இது மூஞ்ச பார்த்தா கிரிமினலா தெரியுது
முதலில் இருந்தே இது எதிர்கட்சிகளின் விளையாட்டு என்று எனக்கு சந்தேகம். அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் வரை இது போல நிறைய நடக்கும்
மல்யுத்த வீரர்கள் முதலில் கூறியது:ஒரு பெண் பிசியோ பலாத்காரம் செய்யப்பட்டார் என்று - பிசியோ அதை மறுத்தார்2015 இல் துருக்கி விஜயத்தின் போது அவர்கள் துன்புறுத்தப்பட்டனர் - பிரிஜ்பூஷன் துருக்கிக்கு செல்லவில்லை2016 ஆம் ஆண்டு மங்கோலியாவில் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர் - குழு (மேரி கோம் தலைமையிலான) மங்கோலியாவிற்கும் பிரிஜ் பூஷன் செல்லவில்லை என்பதைக் கண்டறிந்தது.1000 பெண்கள் துன்புறுத்தப்பட்டனர் - ஆனால் ஒரு பெயரையும் வழங்க முடியவில்லை.விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய ராகேஷ் டிகாயிட் மல்யுத்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்து/நிர்வகித்து வருகிறார், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கம் வீசுவதாக அறிவித்தபோது, அவர்களைத் தடுக்கவில்லை.அவர்களை ஹரித்வாருக்குப் போக வைத்தது, ஊடகங்கள் முன் நாடகம் நடத்தி பின்னர் திடீரென்று நரேஷ் டிகாயிட் தோன்றினார், இப்போது அவர்களை தடுத்து நிறுத்தினர்.அவர்களிடம் பதக்கங்களை பெற்று கொண்டு ஐந்து நாட்கள் அரசாங்கத்திற்கு கெடு அறிவித்துள்ளார். அடுத்த டிராமாவுக்கு தயாராகிறது டூல்கிட்டுகள்
பிரிஜ் பூஷன் சிங் 2015ல் துருக்கியில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் //// விராங்கனை புகார்விசாரனை குழு : 2015ல் நீங்க துருக்கியே போகலையே தாயி !! வீராங்கனை : அப்ப 2016ல் மங்கோலியாவில் நடந்திருக்கும். விசாரனை குழு : 2016ல் அவரு மங்கோலியாவுக்கு வரலையே தாயி !!! வீராங்கனை : தயவு செய்து எதாவது நடவடிக்கை எடுங்க. வெளியில நாங்களும் போராளிகள்னு Form ஆகிட்டோம் Pls..!!!! 😊😊😊(என்னய்யா கொடும இது)
இவர்களை போராட தூண்டிவிட்டவன் இன்று அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலையில் பேசிக்கொண்டிருக்கிறான்.